பால் விலை பேருந்து கட்டணம் உயர்கிறது..? முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்..அமைச்சர் கே.என்.நேரு சூசகம்
திருச்சி : அரசு அதிகாரிகள் ஊதிய உயர்வு கேட்கிறார்கள் அரசு எவ்வளவு மானியம் கொடுத்தாலும் செலவை ஈடுக்கட்ட முடியாது எனவும், பால் விலை , பேருந்து கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
Recommended Video
திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75வது சுதந்திர தின விழாவினையொட்டி நடைபெற்ற சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியினை திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

முதல்வர் துபாய் பயணம்
நிகழ்ச்சிக்குப் பின்னர், கே. என். நேரு செய்தியாளர்களிடம் கூறியபோது, "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆண்டவனுக்கு தெரிந்து தான் திருச்சிக்கு கையெழுத்திட வந்துள்ளார். முதலமைச்சர் முதலீட்டாளர்களை ஈர்க்கவே துபாய் சென்றுள்ளார். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு அனைத்து வகைகளிலும் முதன்மை மாநிலம் என்பதை காட்டி, முதலீட்டாளர்களை ஈர்க்க அவர் துபாய் சென்றுள்ளார்.

கொச்சைப்படுத்துகின்றனர்
அதை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி வருகின்றனர். அதிமுகவும், பாஜகவும் தான் இதை தொடர்ந்து செய்கின்றன. அவர்கள் பேசுவதற்கு வேறு பொருளே கிடைப்பதில்லை. யார் அதிகம் திமுகவை திட்டுவது? என்பதில் அதிமுகவினருக்கும், அண்ணாமலைக்கும் இடையே போட்டி நடக்கிறது. ஆனால், அரசை பொறுத்தவரை தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முதலமைச்சர் படிப்படியாக செய்து வருகிறார்.

மக்கள் திமுக பக்கம்
யார் என்ன பேசினாலும் மக்கள் திமுகவின் பக்கம் இருக்கிறார்கள். திமுகவின் இடத்தை பிடிக்க அவர்கள் பலவிதத்தில் பேசி கொண்டு இருக்கிறார்கள். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது இறுதி வடிவத்திற்கு வந்துள்ளது. அதை முதலமைச்சரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின், ஒரு வார காலத்திற்குள் டெண்டர் பணிக்கு வந்து விடும். திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கும் பணி, காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக ஜங்ஷன் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

பால் விலை உயர்வு?
ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் பெறும் போது மக்கள் அதை சந்திப்பார்கள். இது வேண்டுமென்றே திணிப்பதல்ல. தனியார் பால் கொள்முதல் செய்யும் போது அவர்களுக்கு கட்டுப்படியாகாத காரணத்தால் விலையேற்றம் வேண்டும் என்கிறார்கள். அதிகாரிகள் ஊதிய உயர்வு கேட்கிறார்கள். அரசு எவ்வளவு மானியம் கொடுத்தாலும் செலவை ஈடுக்கட்ட முடியாது. இருந்தபோதும் விலையேற்றம் குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications