அமைச்சராக நான் இங்கு வரவில்லை... வியாபாரியாக வந்திருக்கிறேன்... உருகிய வெல்லமண்டி நடராஜன்..!
திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய வியாபாரிகளிடம், தாம் உயிருடன் இருக்கும் வரை மார்க்கெட்டை இடமாற்றம் செய்யவிட மாட்டேன் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்திருக்கிறார்.
திருச்சி காந்திமார்க்கெட் என்பது அந்த ஊரின் அடையாளமாகவும், நூற்றாண்டு பழமை மிக்க பெருமைக்குரிய ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த மார்க்கெட்டை காலி செய்து திருச்சி புறநகரான கள்ளிக்குடி பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இதற்கு வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதோடு இடமாற்றம் செய்யும் முடிவை கண்டித்து போராட்டத்திலும் குதித்துள்ளனர். இந்நிலையில் அவர்களை சந்திக்க சென்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் வியாபாரிகள் யாரும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. இதையடுத்து நான் இங்கு அமைச்சராக வரவில்லை, வியாபாரியாக தான் வந்திருக்கிறேன் என அவர்களிடம் உருகியிருக்கிறார்.
மேலும், தாம் உயிருடன் இருக்கும் வரை காந்தி மார்க்கெட் வியாபாரிகளை இடமாற்றம் செய்யவிடமாட்டேன் என்றும் எப்போதும் வியாபாரிகள் பக்கம் நிற்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் இந்த உருகல் பேச்சு போராட்டக்களத்தில் இருந்தவர்களை வியக்க வைத்தது.

இதனிடையே அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கருத்துக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அமைச்சராவதற்கு முன்பு வரை வெல்லமண்டி நடராஜன் காந்திமார்க்கெட்டில் உள்ள தனது கடைக்கு சென்று வந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications