எல்லா அறிவிப்புகளையும் ''இந்த ஸ்டாலின் சொல்றார்; எடப்பாடி பழனிசாமி செய்கிறார்''.. ஸ்டாலின் கலகல!
திருச்சி: தமிழகம் முழுவதும் வாக்குகளை கைப்பற்ற அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீரங்கத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கூறியதாவது:-

மோடி சொன்னபடி நடக்கவில்லை
திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து மதங்களின் மாண்பை காப்பது என்ற அறிக்கை தந்திருக்கோம். கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று மோடி கூறியிருந்தார். இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை ஒரு 150 ரூபாய் கூட அது கூட வேண்டாம் 15 ரூபாய் கூட நம்முடைய கணக்கில் போடவில்லை.

ஓபிஎஸ் தர்மயுத்தம்
ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு இறந்து போனார். அவருடைய மறைவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுவது மட்டுமே அவர்களுடைய இலக்காக இருந்தது. ஓபிஎஸ் தர்மயுத்தம் நாடகம் நடத்தியதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓபிஎஸ் ஒரு தொலைக்காட்சியில் பேசும்போது கூட நாங்கள் சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார்.

கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி
இன்று வரை அந்தக் கட்சிக்குள் தொடர்ந்து பல கருத்து முரண்பாடுகளும் உட்கட்சிப் பிரச்சனையும் நீடித்து வருகிறது என்பதை ஒபிஎஸ்வே உறுதி செய்திருக்கிறார். விவசாயக் கடன் தள்ளுபடியை பொருத்தவரை கிராமசபை கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்தபோது விவசாயக் கடனை தள்ளுபடி செய்வேன் என்று கூறிய அடுத்த சில மணி நேரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டிருந்தார்.

நான் சொல்கிறேன்; முதல்வர் செய்கிறார்
அதிலும் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் 5 ஆயிரம் கோடி மட்டுமே தள்ளுபடியாகும் நிலை உருவாகியுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரம் கோடி ரூபாயை திமுக ஆட்சி அமைந்தவுடன் அவற்றையும் தள்ளுபடி செய்வேன் என்று உறுதி அளித்தார். இப்படி அநேக திட்டங்களை திமுக அறிவித்த பிறகு செய்கிறார் பழனிசாமி. அதனை ரஜினி ஒரு படத்தில் கூறுகிறார் ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்கிறான் அதேபோல ஸ்டாலின் சொல்றார் எடப்பாடி செய்கிறார். இந்த அரசை தூக்கி எறிய நீங்கள் முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications