Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் விமான போக்குவரத்தையே.. புரட்டி போட்ட சம்பவம்.. இதுதான் நம்ம ஊரு.. பெரிய நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாட்டிற்கு கூடுதல் விமானங்கள் வர தொடங்கி உள்ள நிலையில் திருச்சியில் நடந்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து கோலாலம்பூருக்கு மார்ச் 31-ம் 2024 முதல் புதிய அட்டவணை அடிப்படையில் விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. அதாவது கூடுதல் விமானம் இனி கோலாலம்பூருக்கு இயக்கப்படும் . இதற்கான புக்கிங் தொடங்க உள்ளது.

Mumbai service had smashed the prejudice about the domestic traffic at Trichy

24/7 ஏர்லைன்ஸ் அட்டவணையின் அடிப்படையில் அதிக விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளனர். டெர்மினல் கட்டிடத்தின் நெரிசலைக் குறைக்க அங்கே கட்டிடம் மறுகட்டமைக்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் இங்கே வெளிநாட்டு விமானங்கள் இயங்கும்.

புதிய விமானம்: இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தினசரி மும்பை - மதுரை - மும்பை விமானங்கள் 22-பிப்-2024 முதல் அமலுக்கு வருகிறது

BOM 15:55 IXM 18:00
IXM 19:25 BOM 21:30 ஆகிய விமானங்கள் இங்கே வர உள்ளன.

மதுரைக்கு என்று சர்வதேச விமான நிலையம் இல்லை. இருந்தாலும் தற்காலிகமாக உள்ளூர் விமான நிலையம்ச சர்வதேச விமான சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் மதுரைக்கு நல்ல செய்தியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதிய விமானங்கள்: சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் விமான சேவைகள் தொடங்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-சேலம் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இப்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் சென்னையில் இருந்து சேலத்திற்கு சேவையைத் தொடங்கி உள்ளது, முதல் விமானம் ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும். தினமும் காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.30 மணிக்கு சேலம் சென்றடையும்.

விமான நிலையம்: பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விமானம் 1.45 மணிக்கு இங்கு தரையிறங்கும். டிக்கெட் முன்பதிவுகளின் அடிப்படையில் நாளொன்றுக்கான சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும், டிக்கெட் விலை 2,390 ரூபாயிலிருந்து தொடங்கும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

திருச்சியில் நடந்த சம்பவம்: தமிழ்நாட்டிற்கு கூடுதல் விமானங்கள் வர தொடங்கி உள்ள நிலையில் திருச்சியில் நடந்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.

திருச்சி - மும்பை இடையே சமீபத்தில் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த விமானத்தில் செல்வதற்காக பயணிகள் அங்கே குவிந்து வரிசையில் நின்றனர். 232 இடங்கள் கொண்ட இண்டிகோவின் À321 விமானத்தில் 232 பயணிகளும் வரிசையில் காத்து இருந்தனர். பலரும் இந்த சேவையில் பெரிதாக கூட்டம் இருக்காது என்று நினைத்த போது.. அதை முறியடிக்கும் விதமாக இந்த சேவை தொடக்கப்பட்டதில் இருந்தே அதில் முழுமையாக கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த சேவையை மக்கள் பயன்படுத்துவார்களா என்ற சந்தேகங்களை முறியடிக்கும் விதமாக நேற்று இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த சேவையை தொடங்க பல காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில்தான் தொடக்கத்திலேயே முழுக்க முழுக்க கூட்டமாக இந்த விமான சேவை செயல்பட்டு வருகிறது.

இதனால் இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+