இந்தியக் குடியுரிமையைப் போராடிப் பெற்ற பெண்! நிஜத்தில் ஒரு ‘சர்க்கார்’ நாயகி!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கம் போல் எங்கும் பெரிய அளவுக்கு அசம்பாவிதங்கள் இல்லாமல் இந்தத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டி உள்ளது தேர்தல் ஆணையம்.

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த முறை கிட்டத்தட்ட 73% வாக்குகள் பதிவாகி இருந்தது. அதை எப்படியாவது உயர்த்த வேண்டும் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் பல வழிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது.
ஆனால், இது வெயில் காலம் என்பதால் வாக்குச் சதவீதம் முன்பைவிட துரதிருஷ்டமாகக் குறைந்து போய் விட்டது.
அதையும் மீறி சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்குப்பதிவு என்பது குறைந்துள்ளது. படித்த மக்கள் அதிகம் உள்ள சென்னையில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் குறைந்துள்ளது வேதனையான விசயம்தான்.
பலரும் வாக்குரிமையை வைத்துக் கொண்டு வாக்களிக்காமல் உள்ள காலத்தில், திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றம் வரை சென்று 'சர்க்கார்’ படப் பாணியில் ஓட்டுரிமையைப் பெற்றுள்ளார். அவர் யார்? எதற்காக இவ்வளவு போராட்டம்?
திருச்சியைச் சேர்ந்தவர் நளினி. இவர் திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகிறார். இவரது தாத்தாவும் பாட்டியும் இந்தியாவில் பிறந்தவர்கள். இவரது அப்பாவும் அம்மாவும் இந்திய வம்சாவளியினர்.
நளினி பிறந்ததோ ராமநாதபுரம். ஆனால், இவருக்கு வாக்குரிமை இல்லாமல் இருந்தது. ஆகவே நளினி நீதிமன்றத்தில் தனக்கு வாக்குரிமை வழங்கவேண்டும் என்று கூறி வழக்குத் தொடுத்தார். இவரது வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வந்தது.

தான் ஒரு இந்தியக் குடிமகள் என்பதற்கான ஆவணங்கள் வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் அவர் தனக்கு ஓட்டுரிமை வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதிலும் நளினிக்கு வெற்றியே கிடைத்தது. அதனடிப்படையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நளினி தனது முதல் வாக்குரிமையை நிறைவேற்றி உள்ளார்.
திருச்சி விமானநிலையம் அருகில் உள்ள அன்னை ஆசிரமம் எம்.எம்.நடுநிலைப்பள்ளிக்கு நேற்று காலை அவர் மிக உற்சாகமாக வாக்களிக்க வந்த போது, அவரது முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.
நளினி கிருபாகரன், “எனக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கின்ற மகிழ்ச்சியைப் பற்றிச் சொல்ல அளவே இல்லை. அந்தளவுக்குச் சந்தோஷமாக உணர்கிறேன். என்னுடைய ஒரு ஓட்டு என்பது எங்கள் மக்கள் அனைவருக்கும் சேர்ந்து கிடைத்துள்ள உரிமைக்கான அடையாளம். நான் அப்படித்தான் நினைக்கிறேன்.
என் மக்கள் அனைவருக்கும் சேர்த்துத்தான் இந்த வாக்கை நான் பதிவு செய்திருக்கிறேன். நான் மட்டும் தனியாக இதைப் போடவில்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வரும் என்று நான் பல மாதங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த எதிர்பார்ப்பு இன்று நிறைவேறி உள்ளது. ரொம்ப சந்தோஷமாக நான் இன்றைக்கு வாக்களித்தேன்” என்று சொல்லும் நளினி பேசிக் கொண்டிருக்கும்போதே கண்கலங்கினார்.
ஆட்சியர் பிரதீப் குமார், “இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள இந்த ஒரு நபர் மட்டும் இந்தியக் குடிமகள். அவர் பாஸ்போர்ட் வைத்துள்ளார். அதாவது 1950க்குப் பிறகு 1987க்கு முன்னதாக பிறந்த குடிமகனாக இருந்தால், அவர்கள் இந்தியப் பிரஜையாக கருதப்படுவார்கள் எனச் சட்டம் சொல்கிறது.
அதனடிப்படையில் தான் அவருக்கு நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு பாஸ்போர்ட் கிடைத்துள்ளது. நளினி இலங்கை அகதி கிடையாது. அவர் இந்தியாவின் குடிமகள்தான். ஆகவே அவருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது” என்று விளக்கமளித்திருக்கிறார்.
நளினியைப் போலப் பல இந்திய வம்சாவளியினர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் தன்னைப் போல வாக்குரிமை கிடைக்க வேண்டும் என்பதே தனது கனவு என்று கூறு நளினி, அவர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறார் இந்த நிஜ 'சர்க்கார்’ படப் பாணி போராளி.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications