நாட்டை காப்பாற்ற பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.. 'தேசம் காப்போம்' மாநாட்டில் திருமாவளவன் ஆவேசம்
திருச்சி: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டை காப்பாற்ற முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
'தேசம் காப்போம்' என்கிற தலைப்பில் திருச்சி ஜி கார்னர் ராணுவ மைதானத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று இரவு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட தோழமை கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர். நிறைவுரை ஆற்றிய தொல்.திருமாவளவன் பேசியதாவது:

ரவிகுமாருக்கு குறி
இந்த மாநாட்டை தடை செய்ய சனாதன சக்திகள் காவல் துறையை அணுகி மனு அளித்தார்கள். இந்த மாநாடு திமுக தேர்தல் கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம். திமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும். எங்களது கட்சி பிரமுகர் சனாதனவாதிகளால் ரவிக்குமார் குறி வைக்கப்பட்டிருக்கிறார். இந்து மத முற்போக்குவாதிகளே கொல்லப்படுகிறார்கள்.

நாட்டை காப்பாற்ற
காங்கிரஸ் ஆட்சியில் சனாதனவாதிகள் வாய் பேசவில்லை. மோடி அரசில்தான் அவர்கள் கொட்டமடிக்க களம் அமைத்து தரப்பட்டுள்ளது. தலித், கிறித்துவர், இஸ்லாமியர்களுக்கு நாட்டில்பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சனாதனவாதிகள், அதானி, அம்பானி ஆகியோர்தான் நாட்டில் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பாஜக மட்டும், மீண்டும் ஆளுகிற நிலை வந்தால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.

சனாதனம்
எச்.ராஜா போன்றோரெல்லாம் பெரியாரை விமர்சிக்கும் அளவுக்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜாவுக்கு இந்த மாநாடு ஒரு பாடம்.
சனாதானத்துக்கு எதிரான போராட்டத்தை பெரியாரும், அம்பேத்கரும் முன்னெடுத்தார்கள். புத்தர் சனாதனத்தை எதிர்த்தார். புத்தரின் காலத்திலிருந்து சமத்துவத்துக்கான, சகோதரத்துவத்துக்கான போராட்டம் துவங்கியது.

குலத்தொழில்
வருணாசிரம், சனாதன தர்மத்துக்காக பெண்களை ஒடுக்கிய ஒரு கோட்பாடு ஆகும். குலத்தொழிலை தூக்கிப்பிடிப்பதுதான் சனாதனம். ஜோதிராவ் பூலே பெண்களுக்காக பள்ளிக்கூடம் உருவாக்கியவர். அதற்காக கல்லால் அடிக்கப்பட்டார். இந்த நாட்டில், தனிச்சுடுகாடு நிலவுகிறது. தனி சேரி நிலவுகிறது. ஆனால், இந்த சூழ்நிலைக்கு நடுவே, சமத்துவபுரத்தை உருவாக்கியவர் கருணாநிதி. எல்லா சாதியினரும் அர்ச்சகராக சட்டத்தை உருவாக்கியவர் கருணாநிதி. கேரளாவில் இதை சட்டமாக்கி இருக்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications