தமிழகத்தில் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி ரெய்டு: 57 செல்போன்கள், 68 சிம்கார்டுகள் பறிமுதல்
திருச்சி: குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருச்சி சிறப்பு முகாம் உள்ளிட்ட தமிழகத்தில் 25 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனைகளில் 57 செல்போன்கள், 68 சிம்கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
கேரளாவில் அண்மையில் ரூ1,500 கோடி போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 16 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் ஒருபகுதியாக இன்று தமிழகத்தில் சென்னை உட்பட 20 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருச்சி சிறப்பு முகாமிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். இம்முகாமில் பெரும்பாலானோர் ஈழத் தமிழர்கள். இவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருந்தனர். இவர்களது கோரிக்கையை அண்மையில் தமிழக அரசு ஏற்றது.

இன்றைய சோதனைகள் மொத்தம் 25 இடங்களில் நடைபெற்றது. இச்சோதனைகளில் 57 செல்போன்கள், 68 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ்கள், 2 லேப் டாப்கள், இலங்கை பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications