திருச்சி ஏர்போர்ட்டில் சுற்றிவளைத்த என்.ஐ.ஏ.. சார்ஜாவில் இருந்து வந்தவரிடம் 5 மணி நேரம் விசாரணை!
திருச்சி : சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த தஞ்சாவூரை சேர்ந்த முகமது அசாப் என்பவரை தடுத்து நிறுத்தி விமான நிலையத்தில் வைத்தே சுமார் 5 மணி நேரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையோரின் வீடுகளில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், சென்னையை சேர்ந்த அப்துல் ரசாக், மதுரையை சேர்ந்த முகமது யூசப், முகமது அப்பாஸ், திண்டுக்கல்லை சேர்ந்த கைசர் மற்றும் தேனியைச் சேர்ந்த சாதிக் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையின் ஒருபகுதியாக திருச்சி விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து வந்த தஞ்சையை சேர்ந்த முகமது அசாப் என்பவரிடம் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணை மதியம் 3 மணியளவில் விசாரணையானது நிறைவடைந்தது. விசாரணையின் முடிவில் அவர் எந்த தடை செய்யப்பட்ட அமைப்போடும் தொடர்பில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
முகமது அசாப் கடந்த 28 ஆம் தேதி திருச்சிக்கு வருகிறேன் என அவர்கள் உறவினர்களிடம் கூறிய நிலையில் அவர் வராமல் இருந்துள்ளார். மேலும் குடும்பத்தினரிடம் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று திருச்சி விமான நிலையம் வந்த அசாப்பிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முகமது அசாப் என்பவர் சட்டவிரோதமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு அவரது கருவிழி ரேகை பொருந்தாததை அடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில் இந்தியாவுக்குத் திரும்பிய அவரை, திருச்சி விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக முகமது அசாப்பிடம் விசாரணை நடத்தினர்.
முகமது அசாப் வெளிநாட்டில் இருக்கும்போது இங்கு உள்ளவர்கள் யார் யாரிடம் தொடர்பில் இருந்தார், அவருடைய சமூக வலைதள கணக்கு, வெளிநாட்டில் இருக்கும்போது அவர் இங்கு யாருக்கெனும் நன்கொடைகள் தந்தாரா என்பது குறித்தெல்லாம் அவரிடம் விசாரணை நடைபெற்றதாகத் தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications