“டபுள் செஞ்சுரி அடிச்சேன்னு வரலாற்றுல இடம்பிடிக்கப் போறேன்”.. வருண்குமார் IPS-க்கு சீமான் பதில்!
திருச்சி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் தெரிவித்த நிலையில், அவருக்கு பதில் கொடுக்கும் வகையில் பிரஸ் மீட்டில் இன்று பேசி இருக்கிறார் சீமான்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருச்சி எஸ்பி-யான வருண்குமாரை விமர்சனம் செய்து வந்தனர்.

இது போன்ற விமர்சனங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி வருண்குமார் எச்சரித்து இருந்தார். எனினும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் எஸ்பி-யை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், வருண்குமார் ஐபிஎஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, ஒரு யூடியூபர் சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் சாடினார். எனவே, அதற்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் நோட்டீஸை என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன்.
நான் சட்டப்படி இந்த நோட்டீஸ் அனுப்பிய ஒரே காரணத்துக்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர்.
நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் எங்களுக்கு இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது ஒரு பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும், நாங்கள் இதை பயத்தினால் மேற்கொள்ளவில்லை.
அவர்கள் இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவுமில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்துக்கு சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும்.
அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன்பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன். அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்வேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார் வருண்குமார்.
இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எஸ்.பி வருண்குமார் ஐ.பி.எஸ்ஸுக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். "நான் 138 வழக்குகளில் இருக்கிறேன். அதை அதிகமாக்கி 200 வழக்குகள் ஆக்கிவிடுவோம் என நினைக்கிறார். டபுள் செஞ்சுரி அடித்தார் சீமான் என வரலாற்றில் இடம்பெற வேண்டுமில்லையா?
நீங்கள் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை செய்ய வேண்டும். திமுகவின் ஐ.டி விங்குக்கு வேலை செய்யக்கூடாது. நான் பார்க்காத வழக்கா? நீ அதிகாரத்தில் ஒரு புள்ளி. நான் அதிகாரத்தையே எதிர்த்து சண்டை செஞ்சிக்கிட்டு இருக்கேன். இந்திய அரசையும் இந்த அரசையும் எதிர்த்து சண்டை செய்யும் எனக்கு நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்? நீங்கள் எதை அனுப்பினாலும் என் வீட்டில் ஐந்தாறு குப்பைத் தொட்டிகள் இருக்கிறது, கிழித்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்.












Click it and Unblock the Notifications