தகதகவென மின்னிய தங்கம்.. அதை கொண்டு போய் "அங்கே" வச்சு கடத்தி.. கருமம் கருமம்!
திருச்சி ஏர்போர்ட்டில் தங்கம் கடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டனர்
திருச்சி: தகதகவென மின்னும் பளபள தங்கம்.. ஆனால் அதை "அந்த" இடத்தில் போய் வச்சு கடத்தி கொண்டு வந்திருக்கிறார்கள் 11 பேரும்!
தமிழகம் முழுவதும் ஏர்போர்ட்களில் தங்கம் கடத்தல் நடக்காத வண்ணம் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை தடுத்து வருகிறார்கள். அதில் பிடிபடுபவர்களையும் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார்கள்.

அப்படியும் ஒருசிலர் டிமிக்கி கொடுத்து தங்கத்தை கடத்தவும் செய்கிறார்கள்.. இது நிறைய திருச்சி ஏர்போர்ட்டில் நடந்து வருகிறது.. அதனால்தான் கூடுதல் விழிப்புணர்வுடன் அதிகாரிகள் அங்கு கண்காணித்து வருகிறார்கள்.
ஒருசிலர் வித்தியாசமான முறையில் தங்கத்தை கடத்தி கொண்டு வந்து விடுகிறார்கள்.. அப்படித்தான் இப்போதும் சிக்கி உள்ளனர். சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையிட்டனா்
அதில் 11 பேர் மீது மட்டும் சந்தேகம் வலுத்தது.. அவர்கள் பெயர்.. செல்லக்குமாா், கணபதி, வீரமுத்து, செந்தில்குமாா், ரவிச்சந்திரன், கணேசன், சக்திவேல், நாராயணன், கோவிந்தசாமி, சீனிவாசன், மற்றொரு ரவிச்சந்திரன் ஆகியோர்தான் அந்த 11 பயணிகள்.
அவர்களை தனியே அழைத்து கொண்டு போய் அதிகாரிகள் விசாரித்தனர். 11 பேருமே தங்களின் உள்ளாடையில் அதாவது ஜட்டியில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் சிலா் ஏர்போர்ட்டில் இருந்து உடைமைகளை வெளியே கொண்டு வர பயன்படுத்தும் டிராலிகளிலும் தங்ககட்டிகளை மறைத்து வைத்து வெளியே கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இந்த கடத்தல் தங்கம் 1 கிலோ, 458 கிராம் என்கிறார்கள்... அதாவது ஜட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டு வந்த தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 55.65 லட்சம் ஆகும்! 11 பேரும் இப்போது வசமாக சிக்கி உள்ளனர்.. விசாரணை தொடர்கிறது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications