குரங்கு சேட்டையால இருக்கு! பாடாய் படுத்தும் ரீல்ஸ் மோகம்! தலைகீழாக குதித்த புள்ளிங்கோ! திருச்சி ஷாக்
திருச்சி: பொதுமக்கள் அதிகம் நடமாடும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாணவிகள் முன் இளைஞர் ஒருவர் தலைகீழாக பல்டி அடித்து சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாங்க மட்டும் சும்மாவா என்பது போல் பஸ்ஸை வழிமறித்து ப்ராங்க் செய்துள்ளனர் மாணவிகள்..
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் சிறிய சிறிய வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் தான் ஒரு பிரபலமான நபராக மாற வேண்டும் என பல இளைஞர்கள் இளம்பெண்கள் சமூக வலைதளங்களில் உலாவுவதை பார்க்க முடிகிறது.

டிக்-டாக் வந்த பிறகு திடீர் செலிப்ரட்டிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. ஜிபி முத்து, திருச்சி சாதனா போன்றவர்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். ஆரம்பத்தில் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என பலரும் பாராட்டிய நிலையில் நாட்கள் செல்லச் செல்ல அது ஆபாசமாக மாறத் தொடங்கியது.
இதையடுத்து பல நிறுவனங்கள் அதாவது பேஸ்புக் போன்றவையே ஷார்ட் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கின. இதையடுத்து பலரும் தங்கள் வீடியோக்களை அதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
சமையல் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், கணவன் மனைவி நடனம், இசை என தொடர்ந்து அதில் வீடியோக்களை பதிவிட்டு வரும் இளைஞர்கள் இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அற்ப சந்தோஷத்திற்காகவும், ஒரு சில லைக்குகளுக்காகவும் ரீல்ஸ் என்ற பெயரில் அட்டகாசம் செய்து வருகின்றனர் இளைஞர்கள்.

ஓடும் ரயில், பேருந்தில் அட்டகாசம் செய்வது, சாலைகளில் ஜிம்னாஸ்டிக் செய்வது, ப்ராங்க் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது, பட்டாக் கத்தியால் கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் மாணவிகள், இளம்பெண்கள் முன் ஜிம்னாஸ்டிக் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இது போன்ற வீடியோக்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் போது போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அப்படி ஒரு சம்பவம் தான் திருச்சியில் அரங்கேறி இருக்கிறது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் சத்திரம் பேருந்து நிலையத்தில் மாணவிகள் முன் இளைஞர் ஒருவர் தலைகீழாக பல்டி அடித்து சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி நகரின் மையப் பகுதியில் சத்திரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு திருச்சி மற்றும் புறநகருக்கு செல்லும் மக்கள் இந்த பேருந்து நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இளைஞர் ஒருவர் தொடர்ந்து அப்பகுதியில் சாகசம் செய்து அதனை சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டு வந்தார். குறிப்பாக மாணவிகள் நடந்து வரும்போது அவர்களை பயமுறுத்தும் வகையில் பல்டி அடித்து வீடியோ எடுத்ததோடு அதனை ரீல்ஸ் ஆகவும் வெளியிட்டுள்ளார். இதை அடுத்து இது குறித்து பொதுமக்களும் மாணவிகளும் சத்திரம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த வீடியோவை வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் அதே பேருந்து நிலையத்தில் சாலையில் சென்ற பேருந்தை இரண்டு பள்ளி மாணவிகள் மறித்துள்ளனர். அப்போது பேருந்தை ஓட்டுனர் நிறுத்திய நிலையில் பேருந்தில் ஏறாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆகினர். அதனையும் ரிலீஸ் ஆக வெளியிட்டிருக்கும் நிலையில் இது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications