80 நாட்களுக்கு பிறகு.. திருச்சியில் இருந்து இன்று முதல் தொடங்கிய தனியார் பேருந்து போக்குவரத்து
திருச்சி: பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திருச்சியிலிருந்து 80 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இன்று முதல் இயங்கத் தொடங்கியது.
மண்டலத்துக்குள் மட்டுமே பேருந்து இயக்க அனுமதிக்கப்பட்டதால் திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மட்டுமே இயங்கின. இதனால், பிற மண்டலங்களுக்கு செல்ல வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டது.

கொரோனா பரவுதலை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது. 5ஆவது கட்டமாக அறிவிக்கப்பட்ட முடக்கத்தில் அரசுப் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. எனினும், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை முதல் தனியார் பேருந்துகளும் இயங்கத் தொடங்கியுள்ளன.
திருச்சி மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்து நிலையங்களுக்கு காலை முதலே பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி போதிய அறிவுரைகள் வழங்கி அவரவர் வழித்தடம் செல்லுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பின்னர், சமூக இடைவெளியுடன் பயணிகளை ஏற்றி மண்டலத்துக்குள் மட்டுமான போக்குவரத்து தொடங்கியது. 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முதல்நாள் இயக்கப்பட்டன.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications