பஞ்சாயத்து தலைவருடன் மோதல்.. குப்பை அள்ள ஆள் இல்லை.. தாங்களே களம் இறங்கிய கவுன்சிலர்கள்!
மணப்பாறை: புத்தாநத்தம் ஊராட்சி தி.மு.க. தலைவர் அமுதா ஆனந்தன், ஊராட்சி செயலாளர் ஆகியோர் நிர்வாகத்தை கண்டித்து ஆறு ஊராட்சி உறுப்பினர்கள் தெருக்களில் உள்ள குப்பைகள் மற்றும் சாக்கடையில் உள்ள குப்பைகளை அகற்றினார்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தாநத்தம் கிராம ஊராட்சி. திமுகவைச் சேர்ந்த ஆ.அமுதா ஆனந்தன் ஊராட்சி தலைவராக உள்ளார். ஊராட்சி செயலாளராக வெங்கட்ராமன் உள்ளார்.
இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் சரியாக வேலைக்கு வர வில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 4 துப்புரவு பணியாளர்கள் ஓய்வு பெற்ற நிலையில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்காலிக துப்புரவு பணியாளர்களையும் இதுவரை நியமிக்கவில்லையாம்.

குப்பைகள்
இதனால் குப்பைகள் அதிகரித்து அள்ள ஆள் இல்லாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று புத்தாநத்தம் பஞ்சாயத்து கஸ்பாவின் 6 வார்டு உறுப்பினர்கள் அனைவரும் தாங்களே முன்வந்து புத்தாநத்தம் பகுதிகளில் சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி கண்டனங்களை தெரிவித்தனர்.

வார்டு உறுப்பினர்கள்
இதில் புத்தாநத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சபியுல்லா, சிராஜ்தீன், முகமது இப்ராகிம், ராஜாமுகமது, ஹபீபுண்ணீசா தாஹிர், முகம்மது கோயா ஆகியோர் சாக்கடைகளை அகற்றும் பணியில் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள்
புத்தாநத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தினமும் பலமுறை வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லையாம். அதனால் தான் ஊராட்சி மன்ற உறுப்பினர்களே புத்தாநத்தம் கஸ்பாவில் உள்ள அரசு மருத்துவமனை அருகே உள்ள குப்பைககளும், தெருக்களில் உள்ள சாக்கடையில் உள்ள குப்பைகளை அவர்களே அகற்றினார்கள். இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

குளறுபடி
இதனிடையே குப்பை அள்ளிய கவுன்சிலர்கள் தரப்பில் என்ன பிரச்சனை என்று கூறுகையில், தி.மு.க. வைச் சேர்ந்தவர் புத்தாநத்தம் ஊராட்சி தலைவர் அமுதா இவரது கணவர் ஆர் ஆனந்தன் தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஊராட்சியில் நிர்வாகம் பார்க்கிறார். ஊராட்சி கூட்டங்களில் இவரை கூட்டத்தை நடத்துகிறார். தனது மனைவியை எதை படிக்க விடாமல் இவரை நான் தான் ஊராட்சி தலைவர் போல செயல்படுகிறார். அவருக்கு உறுதுணையாக புத்தாநத்தம் ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமன் செயல்படுகிறார்கள். இவர்களால் பஞ்சாயத்து நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது என்றார்கள்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications