ராஜேந்திர பாலாஜி காலையில் மதுரை மத்திய சிறை.. மாலையில் திருச்சி மத்திய சிறை.. ஏன் என்னாச்சு?
திருச்சி: நிர்வாக காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
Recommended Video
அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாக கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்விருந்த நிலையில் தலைமறைவானார்.
தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.

கர்நாடகாவில் சுற்றி வளைப்பு
இந்நிலையில் நேற்று காலை கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து நேற்று இரவு விருதுநகருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

குற்றவியல் நீதிமன்றம்
இதனையடுத்து இன்று காலை விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மதுரை சிறையில் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ராஜேந்திர பாலாஜியை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அறிவித்தது.

திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
இதைத் தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன்
திருச்சிக்கு அழைத்து புறப்பட்டனர். வரும் வழியில் மதிய உணவை முடித்து விட்டு சுமார் 3 .15 மணி அளவில்
காவல்துறை வாகனம் சிறை வளாகத்தில் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு
ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முன்ஜாமீன் மனுவை விசாரிக்க இருந்த நிலையில் அவரை கைது செய்ய என்ன அவசரம் என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications