மீண்டும் சூடுபிடித்த ராமஜெயம் கொலை வழக்கு! திருச்சி தியேட்டரில் திட்டம் தீட்டப்பட்டதா? தீவிர விசாரணை
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு தொடா்பாக சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் திருச்சியில் வியாழக்கிழமை இரவு தீவிர விசாரணை நடத்தி உள்ளார். திருச்சி பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. ராமஜெயம் கொலை செய்யப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.
திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் தனது வீட்டில் இருந்து அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம் முட்புதரில், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் ராமஜெயம் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் துப்புத் துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை இன்னும் நீண்டு வருகிறது. பல ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை.
இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளாக நியமித்தது.
அதன்படி விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி டிஐஜி வருண்குமார், ஏற்கெனவே திருச்சி, மதுரை, நெல்லை, புழல் உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் நேற்று முன்தினம் இரவு திருச்சி பாலக்கரையில் உள்ள பிரபல தியேட்டருக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அங்கு தியேட்டரின் உரிமையாளர் மற்றும் தியேட்டரில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார்.
ராமஜெயம் கொலை தொடர்பாக இந்த தியேட்டரில் வைத்து சதி திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு ரவுடி குறித்தும் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 5 மணி விசாரணைக்கு பின், டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குழுவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த தியேட்டர் ராமஜெயம் கொலை நடந்த 2012 ஆம் ஆண்டில், சசிகலா உறவினர் திவாகருக்கு சொந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு திரையரங்கை வேறு சிலருக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். சில ஆண்டுகள் செயல்படாமல் இருந்த அந்த திரையரங்கு புனரமைப்பு செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டுக்கு பின்பு மீண்டும் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. டிஐஜி வருண்குமாரின் விசாரணையில் இந்த தியேட்டர் குறித்து சில தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு தீவிர விசாரணை நடத்தியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications