நீங்க கட்டிபிடிக்க வேண்டிய ஆள் அஜித் இல்ல தனுஷ்.. விஜயை கலாய்த்த ஆர்.பி உதயகுமார்
திருச்சி:தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு திராவிட இயக்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சியில் இருந்தன. இரு பெரும் திராவிட கட்சிகளை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அஜித் 40 ஆண்டுகளாக இங்கே தானே இருக்கிறார். அவரை ஏன் லண்டன் சென்று கட்டிபிடிக்க வேண்டும். தனுஷை தானே கட்டிபிடித்திருக்க வேண்டுமென ஆர்.பி உதயகுமார் நக்கலாக பேசியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசுகையில், "விஜயபாஸ்கர் தவெகவில் மிகவும் கஷ்டப்படுகிறார். தவெக அமைச்சரை மாப்பிள்ளை.. மாப்பிள்ளை என்கிறார். நீங்கள் என்ன பொண்ணு கொடுக்க போகிறார்களா. அந்த அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து சென்று, விராலிமலை கடந்த 10 ஆண்டுகளில் எந்த பணியும் நடக்காமல் இருட்டில் உள்ளது. இனி தான் வெளிச்சம் வரும் என விஜயபாஸ்கர் முன்னிலையிலேயே சொல்கிறார்.

மானங்கெட்ட பிழைப்பு
இது மானங்கெட்ட பிழைப்பு. இதற்கு 4 வீட்டில் பிச்சை எடுத்து சாப்பிடலாம். கல் குவாரி, கல்லூரி எல்லாம் இருக்கிறது. இவ்வளவு சொத்து இருக்கும்போது என்ன பிரச்சனை இருக்கிறது. தொண்டர்கள் வீட்டிற்கு சென்றாலே சோறு கொடுப்பார்கள். அதை சாப்பிட்டு வாழ்ந்திருக்கலாம். அமைச்சர் பர்வேஸ் நேற்று முளைச்ச பையன். நீ அமைச்சராக இருந்தபோது அவன் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்திருப்பான். அடிமை கட்சிக்கு அகதியாக போனவர்களுக்கு இதுதான் நிலைமை.
அதிமுகவில் இருந்தவரை தான் உனக்கு மதிப்பு, மரியாதை எல்லாம். சாகும்போது அதிமுக கொடி உன் நெஞ்சில் இருந்தால், உன் தொண்டன் உன்னை வணங்குவான். விஜய் உன்னை நம்பவே மாட்டார். நல்லா பேசுறவனை நம்பலாம். உம்மென்று இருப்பவனை நம்பவே முடியாது. பிரதமர் அருகிலேயே விஜய் கைகட்டி இறுக்கமாக அமர்ந்தார். கடைசி வரை சிரிக்கவே இல்லை. இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழகத்திற்கு என்னென்ன வேண்டும் என்று பட்டியல் போட்டு கேட்டிருப்பார்.
தனுஷ் அரசியலால் கால் நடுக்கம்
இப்போது எந்த ஊரில் பார்த்தாலும் அரசு அதிகாரிகள் தலையில் துண்டு போட்டு அமர்ந்துள்ளனர். பேரிகார்டு கட்டியே வாழ்க்கை போய்விட்டது என்கிறார்கள். இது பேரிகார்டு ஆட்சி. அஜித் 40, 50 ஆண்டுகளாக இங்கே தான் இருக்கிறார். விஜயும் இங்கே தான் இருக்கிறார். இவர்கள் இருவரும் லண்டன் சென்று கட்டி பிடிக்கிறார்கள். ரீல்ஸ்க்காக ரூட் மாபியா பழனிசாமி சொன்னதற்காக, கீழே குனிந்துபடி ஓடிப் போய் கட்டிபிடித்தார்.
எதற்காக அஜித்தை கட்டி பிடித்தாய். நீ கட்டி பிடிக்க வேண்டியது தனுஷ்யா. அந்த ஆள் தானே இப்போது வந்து கொண்டிருக்கிறார் அரசியலுக்கு. தெரிந்திருந்தால் முன்னாடியே தனுஷை கட்டி பிடித்திருப்பார். யார் வந்தாலும் பயப்பட மாட்டோம் என அமைச்சர் சொல்லும்போதே, அவர்களின் கால் நடுங்குகிறது. நீங்கள் என்ன பாரம்பர்ய கட்சியா. தவெக தொங்கி 2.5 ஆண்டுகள் கூட ஆகவில்லையா. கன்டென்ட் கிரியேட்டர்களை வைத்து போலியான வீடியோ போட்டு ஆட்சிக்கு வந்துள்ளார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
