“ரிஜெக்டட்”.. அதிமுகவில் ஓபிஎஸ் நீக்கத்தை ரத்து செய்து திருச்சி மாநாட்டில் தீர்மானம் - மொத்தம் 10
திருச்சி: திருச்சியில் ஓ பன்னீர்செல்வம் கூட்டிய பிரம்மாண்ட மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கும் நிலையில் முக்கியமாக,
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதை நிராகரித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோரிடையே மோதல் வெடித்து ஓராண்டை அடைய உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமி அதில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி. மறுபக்கம் அதிமுகவை கைப்பற்றும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பல்வேறு சட்டப்போராட்டங்களை தனது ஆதரவாளர்கள் துணையுடன் நடத்தி வருகிறார். இதற்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை சில நாட்களுக்கு முன் ஏற்றது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில்தான் தன்னுடைய பலத்தை தமிழ்நாடு மக்கள் மத்தியில் காட்டும் வகையில் தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமான திருச்சியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த முடிவு செய்தார் ஓ.பன்னீர்செல்வம். எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழாவுடன் முப்பெரும் விழாவின் மாநாட்டை நடத்த உள்ளதாக அறிவித்தார்.
"அதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூட உள்ளார்கள். அதிமுகவின் வலிமையை அவர்கள் நிரூபிப்பார்கள். சசிகலா, கேசி பழனிசாமி, அன்வர் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முறைப்படி அழைப்பு விடுக்கப்படும்." என்றார்.

இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் தரப்பு திருச்சியில் முப்பெரும் விழா கூட்டம் கூடியது. இதில் ஏராளமான ஆதரவாளர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, ஓபிஎஸ் நீக்கம், உள்ளிட்ட 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
அதில், "போலி பொதுக்குழு கூட்டம் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை நிராகரிக்கிறோம். நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்ற தீர்மானமும், புதிய பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. எம்ஜிஆர் உருவாக்கி அதிமுக ஜாதி, மதம் தாண்டி அனைத்து மக்களுக்குமான இயக்கமாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications