திருச்சி கிழக்கு.. ஓட்டு போட்டு வந்த உடனே கே என் நேரு சொன்ன முக்கியமான விஷயம்
திருச்சி: திருச்சி மக்கள் மன்றத்தில் வாக்களித்த பின்பு திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே என் நேரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த தேர்தல் எந்த வகையிலும் சவாலாக இல்லை. எப்பொழுதும் போல் தான் உள்ளது. ஊடகங்கள் தான் இந்த தேர்தலை சவாலான தேர்தல் என வெளியிட்டு வருகிறார்கள்.
திருச்சி கிழக்கு தொகுதியில் நிச்சயமாக உதயசூரியன் தான் வெற்றி பெறும். 9 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய ஆதரவு திமுக கூட்டணிக்கு உள்ளது. டெல்டா மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை நோக்கி தான் நாங்கள் தேர்தல் பணியாற்றினோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. எங்களுடைய இலக்கை நோக்கி தான் நாங்கள் பயணம் செய்து உள்ளோம் மக்களின் ஆதரவு முதலமைச்சருக்கு உள்ளது நிச்சயம் 200 தொகுதுகளில் வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.

திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியாக திருச்சி கிழக்கு இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பேசப்படுகிறது. காரணம் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் இத்தொகுதியில் நேரடியாகப் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியுடன் சேர்த்து, திருச்சி கிழக்கிலும் அவர் களம் காண்பது இத்தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
தற்போதைய எம்.எல்.ஏ-வான திமுகவின் இனிகோ இருதயராஜ் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 தேர்தலில் 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பதால், தனது செல்வாக்கைத் தக்கவைக்க கடுமையான வியூகம் செய்து போராடினார். அதேபோல் : அதிமுக சார்பில் ஜி. ராஜசேகரன் போட்டியிடுகிறார்.
கடந்த முறை இழந்த வெற்றியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் அதிமுக தீவிரமாக இருக்கிறது. தவெக சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த முறை திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு வேளை வழக்கத்தைவிட வாக்கு சதவீதம் அதிகரித்தால் விஜய் தான் காரணமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இது நடக்குமா அல்லது எப்படி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக்












Click it and Unblock the Notifications