திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமத்துவப் பொங்கல் விழா! மகிழ்ச்சியுடன் மாட்டு வண்டி ஓட்டிய திருச்சி கலெக்டர்! களைகட்டிய கொண்டாட்டம்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வேட்டி சட்டை என பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றார்.

அதுமட்டுமல்லாமல் மகிழ்ச்சியுடன் மாட்டு வண்டியை ஓட்டியும் அங்கிருந்தவர்களை அசத்தினார். இது தொடர்பான விவரம் வருமாறு;

 Samathuva Pongal Festival! Trichy Collector driving a bullock cart

திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. அந்த வகையில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் இனாம்குளத்தூா் சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், சாதி, மத பேதமின்றி பாரம்பரிய ஆடைகளை அணிந்து அனைவரும் பங்கேற்றனா். அதேபோல் அனைவரும் ஒன்று கூடி மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

விழாவில், மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா், மாட்டு வண்டியை ஓட்டி வந்து, விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா். இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பரிசுகள் வழங்கினாா்.

Samathuva Pongal Festival! Trichy Collector driving a bullock cart

கிராமங்களில் தூய்மையை பேணி, அடிப்படை வசதிகளை ஒருங்கிணைக்கும் சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், பம்ப் ஆப்ரேட்டா்கள் உள்ளிட்ட அலுவலா்களுக்கும் பாராட்டி ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பிறகு சமத்துவ உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனா்.

Samathuva Pongal Festival! Trichy Collector driving a bullock cart

இதனிடையே, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ஆட்சியா் தனது மனைவி, மகன்களுடன் கலந்து கொண்டாா். குதிரை வண்டியை ஓட்டி மகிழ்ந்தாா். நிகழ்வில், அனைத்து துறை அலுவலா்களும் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் வைத்து வழிபட்டனா். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

English summary
Trichy District Collector Pradeep Kumar participated in the Samathuva Pongal festival held at Inamkulathur Samathuvapuram, dressed in a traditional dress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X