திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுஜித்தை மீட்கும் பணியில் புது சிக்கல்.. நடுக்காட்டுப்பட்டியில் மிதமான மழை.. தொடரும் போராட்டம்!

சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் மணப்பாறை கிராமத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் ஒரு சிக்கல் இருக்கு.. விளக்கும் அதிகாரிகள்

    திருச்சி: சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் மணப்பாறை கிராமத்தில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் நேற்று முதல் நாள் மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். தற்போது ஓஎன்ஜிசியின் அதி நவீன ரிக் இயந்திரங்கள், போர்வெல் எந்திரங்கள் கொண்டு சுஜித் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகே பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு வருகிறது.

    கிட்டத்தட்ட 69 மணி நேரமாக அவனை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆழ்துளைக்கிணறுக்கு அருகில் 10 மீட்டர் தொலைவில் இந்த குழி தோண்டப்படுகிறது.

    வானிலை என்ன

    வானிலை என்ன

    இந்த நிலையில்தான் தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென் மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை வரை

    நாளை வரை

    அதேபோல் மணப்பாறையில் இன்றும் நாளையும் மழை பெய்யலாம் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணப்பாறையில் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இன்று இரவும் , நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மிதமான மழை எப்படி

    மிதமான மழை எப்படி

    தற்போது அங்கு மிதமான மழை பெய்து வருகிரியாது. இது தொடர்பாக மீட்பு பணியில் இருக்கும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வானிலை மைய அதிகாரிகள் ஆலோசனை வழங்கி இருந்தனர். இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வானிலை மையம் அதிகாரிகள் மீட்பு படையினரிடம் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

     தயார் நிலை

    தயார் நிலை

    தற்போது அங்கு மிதமான மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக மீட்பு பணியில் இருக்கும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வானிலை மைய அதிகாரிகள் ஆலோசனை வழங்கி இருந்தனர். இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வானிலை மையம் அதிகாரிகள் மீட்பு படையினரிடம் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

    English summary
    Save Sujith: Manapparai district may see some rain says Weather Department amidst rescue operation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X