சரியில்லாத சாலை.. கால்வாயில் பாய்ந்த பள்ளி பேருந்து.. திருச்சி அருகே பரபரப்பு
Recommended Video
திருச்சி: திருச்சி அருகே கல்லணை பகுதியில், தனியார் பள்ளிக் கூட பேருந்து சாலையோர கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
ரோடு சரியில்லை. மழைத் தண்ணீர் தேங்கி நின்றதால் பஸ் விபத்துக்குள்ளாகி விட்டது. பஸ்சில் குழந்தைகள் இருந்துள்ளனர். இருவருக்கு மட்டும் லேசான காயம் மற்றபடி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கல்லணையில் செல்லம்மாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இன்று காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது முக்குடிப்பட்டி என்ற இடத்தில் பஸ் வந்தபோது, நேற்று பெய்த கன மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தது. சாலையும் கூட சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால் மோசமான நிலையில்தான் உள்ளது.
இந்த நிலையில் பள்ளிப் பேருந்து வேகமாக வந்ததா என்று தெரியவில்லை, சாலையோரமாக இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது. நல்ல வேளையாக பேருந்துக்குள் இருந்த குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். இருவருக்கு மட்டும் லேசான காயம் என்று கூறப்படுகிறது.

இந்த சாலை மோசமாக உள்ளதாக மக்கள் நீண்ட காலமாகவே புகார் கூறி வருகின்றனர். சரி செய்யக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை விமோச்சனமே இல்லை. மழையும் வேறு பிடித்துக் கொண்டுள்ளதால் சாலையில் நடக்கக் கூட பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு மோசமாக உள்ளது. வாகனங்களும் சரி, குறிப்பாக பள்ளி வாகனங்கள் விதிகளை மதிக்காமல் வேகமாக செல்வதும் தொடர் கதையாகவே உள்ளது.

இன்று நடந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எதுவும் நேரிடவில்லை. ஆனால் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காதே.. எனவே சாலையை சரி செய்வதோடு, அனைத்து வாகனங்களும் விதிகளை மதித்து வண்டிகளை ஓட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்தி: திவ்யா
புகைப்படம், வீடியோ உதவி: மாரியப்பன், ஆட்டோ டிரைவர், குமரேசபுரம்
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications