மழையால் வீட்டின் மீது இடிந்து விழுந்த பள்ளியின் சுற்று சுவர்... நேர்ந்த சோகம்!
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மழையால் பள்ளியின் கட்டட சுற்று சுவர் இடிந்து அருகிலிருந்த வீட்டின் மீது விழுந்ததில், வீட்டில் உறங்கி கொண்டிருந்த மில் தொழிலாளி செல்வகுமார் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் 5 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியில் அரசு உதவிபெறும் நடுநிலைபள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியின் கட்டட சுற்று சுவர் அருகிலேயே 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட காலனி ஓட்டு வீடுகள் உள்ளது. இப்பகுதியில் நிவர் புயல் மற்றும் புரவி புயல் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இந்த பள்ளி கட்டடத்தின் மண் சுற்று சுவர் நள்ளிரவில் அருகேயுள்ள பஞ்சாலை தொழிலாளி செல்வகுமார் என்பவரின் வீட்டின் மேல் விழுந்தது. நேற்று நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமார், அவரது மனைவி ராஜாத்தி மற்றும் அவரது ஐந்து குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்கி மரண பயத்தில் அலறினர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளிலிருந்து ராஜாத்தி மற்றும் குழந்தைகளை மீட்டெடுத்தனர்.

இதில் இடிபாடுகளுக்கு இடையே செல்வக்குமார் சிக்கிக்கொண்டார். காயமடைந்த ராஜாத்தி ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியிருந்த செல்வக்குமார் உடலை சடலமாக மீட்டனர்.
உடற்கூராய்வுக்காக செல்வக்குமார் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நிகழ்விடத்தில் மணப்பாறை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் செல்வக்குமார் மனைவி ராஜாத்தி மற்றும் அவர்களது 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications