பஞ்சாங்கம் மூலம் விண்வெளி பயணமா..! வாங்கிக்கட்டும் மாதவன் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையே சொல்றாரு
திருச்சி: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு தற்போது செவ்வாய்கிரகம் செல்வது முடியாத காரியம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து இருக்கிறார்.
பிரபல நடிகர் மாதவன், பொய் வழக்குகளால் சிறை தண்டனை பெற்ற இஸ்ரோவில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட "ராக்கெட்ரி - நம்பி விளைவு" என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில், பொய் வழக்குகளால் நம்பி நாராயணன் அனுபவித்த இழப்புகள் மற்றும் அதிலிருந்து தான் நிரபராதி என அவர் சட்டப்போராட்டம் நடத்தி வென்றது குறித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மாதவனின் சர்ச்சை பேச்சு
வரும் ஜூலை ஒன்றாம் தேதி திரைக்கும் வரும் இந்த திரைப்படம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் மாதவன் பேசினார். அப்போது அவர், "அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33 வது முறைதான் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு பஞ்சாங்கத்தின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு செவ்வாய்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியது." என்றார்.

மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்
மாதவனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, "விண்வெளி பயணங்களுக்கு பஞ்சாங்கத்தை உலகளவில் பயன்படுத்தினார்கள். ஒரு காலத்தில் இங்கிருந்து பார்ப்பதற்காக ஆர்பட்டாவிலிருந்து அதை செய்தார்கள். ஆனால், பஞ்சாங்கம் என்பது ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய ஒன்று கிடையாது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டது.

மாறும் பஞ்சாங்கம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகம் செல்வது என்பது முடியாத காரியம். அது முதலில் சரியாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்தந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் இடங்களை கணித்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப உலகளாவில் எங்களுக்கு என்று இருக்கக்கூடிய பஞ்சாங்கம் மாறுதல் அடைகிறது. அந்த மாறுதலுக்கு ஏற்பதான் புதிதாக உருவாக்கப்பட்ட 'அர்பனாக்' என்ற பஞ்சாங்கத்தை வைத்துதான் எந்த நேரத்திலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பயணத்தை தொடங்க வேண்டும்.

பஞ்சாங்கம் காரணமல்ல
எவ்வளவு வேகத்தில் எப்படி சென்றால் இலக்கை அடைவோம் என்பதை தற்போது அறிவியல்பூர்வமாக கோள்கள் இருக்கக்கூடிய இடங்கள், கோள்களின் பயணங்கள், நாம் பூமியில் இருக்கக்கூடிய இடம், நாம் அனுப்பக்கூடிய பி.எஸ்.எல்.வி. எப்படி போகும், சந்திரயான் எப்படி போகும்? என அனைத்தையும் கணித்து பல ஆய்வுக்கு பிறகுதான் நேரம் கணிக்கப்படுகிறது. பஞ்சாங்கத்தை பார்த்து நேரம் குறிக்கப்படுவது கிடையாது. பஞ்சாங்கம் என்பது கோள்கள் எங்கு இருக்கிறது என்பதை சொல்கிறது. கோள்களின் நகர்வுகளை பார்த்தே நேரம் குறிக்கப்படுகிறது." என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications