"ஏ எப்புட்றா".. இஸ்லாமியர்கள் இன்னமும் திமுகவை நம்பறாங்களே.. "சக்கரம்" மேலே வருது.. பொங்கிய சீமான்
திருச்சி: இந்த இஸ்லாமிய திருமக்கள், இன்னும் நம்புதடா இந்த திமுகவை.. ஏதாவது நல்லது செய்யுமான்னு இன்னும் நம்புகிறார்கள்.. "ஏ எப்புட்றா".. இதை ஒன்னுதான் நமக்கு கேட்க தோன்றுகிறது.. நடக்கிறது எல்லாம் ஒன்னுமே புரியல என்று சீமான் பேசியது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
திருச்சியில் நேற்றைய தினம் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழர்கள் 4 பேரையும் உடனடியாக சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம்...
ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி தரவில்லை... தமிழ்நாட்டில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் அது நடைமுறையில் இல்லை என்று சாடியிருந்தார்.

சிறைவாசிகள்
இதையடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது, "7 தமிழர் விடுதலைக்காக முயற்சி எடுப்போம்" என்று நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொன்னதுதானே.. அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வாக்கு தாருங்கள் என்று அன்று சொன்னது, நீங்கள்தானே.. அதை நம்பித்தானே என் இஸ்லாமிய சொந்தங்கள் உங்களுக்கு ஓட்டுப்போட்டார்கள்.. ஆனால், இப்போ என்ன சொல்றீங்க, இஸ்லாமிய சிறைக் கைதிகளின் விடுதலைக்கு, ஆளுநருக்கு பரிந்துரைப்பதாக சொல்றீங்க.. ஆளுநர், என்ன வேலை செய்வாருன்னு எங்களுக்கு தெரியாதா? ஏற்கனவே நீங்க அனுப்பினதுக்கு எல்லாம் கையெழுத்து போட்டு அனுப்பிட்டாரா?

இஸ்லாமிய மக்கள்
என்ன கொடுமை பாருங்க.. நோய்வாய்ப்பட்டுவிட்டோம், சிகிச்சைக்காக மருத்துவம் செய்வதற்கு சிறைவிடுப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடுகிறார்கள் இஸ்லாமிய சிறைவாசிகள்.. அதுக்கு தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்தது.. கடைசியில் அவர்களின் சிறைவிடுதலையை நீக்கிவிட்டது.. இந்த இஸ்லாமிய திருமக்கள், இன்னும் நம்புதடா இந்த திமுகவை.. ஏதாவது நல்லது செய்யுமான்னு இன்னும் நம்புகிறார்கள்.. "ஏ எப்புட்றா".. இதை ஒன்னுதான் நமக்கு கேட்க தோன்றுகிறது.. நடக்கிறது எல்லாம் ஒன்னுமே புரியல..

எப்புட்றா
சிறையில் இருக்கும் அந்த சகோதரர்களுக்கு யாருமே இல்லைன்னு நினைக்கக்கூடாது, அவர்களுக்கு உடன்பிறந்தவன் நான் இருக்கேன்.. என் உடன்பிறந்தவர்கள் பெருங்கூட்டம் இன்று உலகமெல்லாம் பரவி இருக்கிறது.. திபெத்தியர்களுக்கு குடியுரிமையை தந்திருக்கீங்க.. இந்த நாட்டுக்கும் அவங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஆனால், எனக்கும் இந்த நாட்டுக்கும் சம்பந்தம் இருக்கு.. ஏன் என்றால் இது என் நாடு.. இந்தியா என் நாடு.. இந்த நாட்டின் இறையாண்மை, சட்டதிட்டம், எல்லாவற்றுக்கும் கட்டுப்பட்டு, வரிச்செலுத்தி, வாக்கு செலுத்தி, வாழ்ந்து கொண்டிருக்கும் குடியுரிமை பெற்றவர்கள்.. 13 கோடி மக்கள் நாங்கள்தான் இருக்கோம்..

சக்கரம்
எங்களுக்கு இல்லாத உரிமை திபெத்தியர்களுக்கு எப்படி வந்தது? அவங்களுக்கு வணிக வளாகம், கல்லூரி, விளையாட்டு திடல், கட்டமைப்பு வசதி இதெல்லாம் போய் பாருங்க.. நம்முடைய அகதி முகாம்களை போய் பாருங்க.. ஒரு அடிப்படை வசதிகூட இல்லை.. அதனால், இதெல்லாம் பேசிட்டு இருக்கிற காலம் இல்லை.. கடுமையாக உழைத்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய காலம்.. இப்படியே ஆர்ப்பாட்டம் செய்து பேசிட்டே இருந்தால், எவ்ளோதான் பேசிட்டு இருக்கிறது? சக்கரம் ஒருநாள் மேல வரும், கீழே வரும்.. இன்னைக்கு மேலே இருப்பவர்கள் ஒருநாள் கீழே வருவார்கள்.. இன்றைக்கு வீதியில் இருக்கும் நாங்கள், ஒருநாள் மேலே வருவோம் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications