திருப்பரங்குன்றம் விவகாரம்.. ராமர் கோயில் பிரச்சனை தீர்ந்துவிட்டது.. முருகனை தேடுகின்றனர்.. சீமான்!
திருச்சி: ராமர் கோயில் பிரச்சனை தீர்ந்துவிட்டதால், இப்போது முருகனை தேடுகின்றனர் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சிப்பதாக கூறிய சீமான், இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சனையை இப்போது கையில் எடுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய பாரதி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையாகியது. திருப்பரங்குன்றம் விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில், சீமானின் நடவடிக்கைகள் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மத்தியிலும் கடுமையாக விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், பிப்ரவரி மாதம் லேப்டாப் கொடுக்கிறார்கள். ஏனென்றால் மார்ச் மாதம் தேர்தல் வந்துவிடும். ரூ.10 லட்சம் கோடியில் நிறைவேற்றப்பட்ட ஏதேனும் ஒரு திட்டத்தை அரசு சொல்ல வேண்டும்? மருத்துவம், கல்வி, மின்சாரம், போக்குவரத்து என்று ஏதேனும் ஒன்றை சொல்ல முடியுமா?
அதேபோல் சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திப்பவர்களுக்கு மக்களை பற்றி கவலை இருக்காது. நாடு, மக்கள், வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர்களுக்கு சாதி, மதம், கடவுள் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. முருகன் மேல் என்ன திடீர் பக்தி? கடந்த ஆண்டு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் போது என்ன செய்தீர்கள்? 2 மாதங்களில் தேர்தல் வருகிறது. அதனால் இப்படி செய்கிறார்கள்.
முருகனும், சிவனும் இந்துக் கடவுளா? சைவக் கடவுளா? திடீரென அவர்களுக்கு ஏன் முருகன் மீது பாசம் வருகிறது. ராமர் கோயில் பிரச்சனை தீர்ந்துவிட்டதால், இப்போது முருகனை தேடுகின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சிக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சனையை இப்போது கையில் எடுப்பது ஏன்?
அதேபோல் பாரதியை பற்றி நான் எங்கு வேண்டுமானாலும் பேசுவேன். பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். எங்கு பேசினேன் என்று பார்க்காதே, என்ன பேசினேன் என்று பாருங்கள். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பேன். நாளைக்கு திமுகவை பாரதி பற்றி கூட்டம் போட சொல்லுங்கள்.. நான் போய் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications