நீட் பாவி காங்கிரஸ்.. நான் தூய ஆவி.. காவியை எதிர்த்துட்டு போ.. அடுக்கிய சீமான்
திருச்சி: நீட் தேர்வு விவகாரங்களில் காங்கிரஸ் பாவி என்று சீமான் கூறியுள்ளார். பாவிய வச்சிட்டு காவிய ஏன் எதிர்க்குறீங்க.. தூய ஆவி என்னைய வச்சி எதிர்த்துட்டு போங்க என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வென்றாக வேண்டும் தமிழ் எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சீமான் பேசினார். அப்போது அவர், "சில பேரு திமுகவையும் காங்கிரஸையும் ஒன்று என சொல்றாரு, திமுகவும் அதிமுகவும் ஒன்று என சொல்றாரு என்று கூறுகிறார்கள். என்னை பொருத்த வரையில் நான்கு பேரும் சம எதிரிகள்தான்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ். நீட் தேர்வை கொண்டு வரும்போது உடன் இருந்தது திமுக. நீட் தேர்வுக்கு வேராக இருந்தது காங்கிரஸ்தான். விதை போட்டவன் வளர்த்தவன் தண்ணீர் ஊற்றியவன் பெயர் வைத்தவன் அனைத்தும் காங்கிரஸ் தான். அதை சுதந்திரமாக என் மோடி வளர்க்கிறார். நதிநீர் விவகாரத்தில் முதலமைச்சர் என்ன சொல்ல வேண்டும்? எனக்கு உரிய நதிநீரை பங்கீடு. அப்போதுதான் 2024 தேர்தலில் உனக்கு இடப்டபங்கீடு.
பாவிய வச்சிட்டு காவிய ஏன் எதிர்க்குறீங்க.. தூய ஆவி என்னைய வச்சி எதிர்த்துட்டு போங்க. பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடுகிறாராம். நான் இதுவரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. போட்டியிடும் எண்ணமும் எனக்கு இல்லை. தமிழ் எங்கள் பேச்சு மொழியல்ல. அது எங்கள் மூச்சு மொழி. ஏன் தமிழ் வெல்ல வேண்டும்? ஏனெனில் உலகின் முதல் மனிதன் தமிழன். அவன் பேசிய முதல் மொழி தமிழ்மொழி. இதை அமெரிக்காவின் மொழியியல் ஆய்வறிஞர்களே சொல்கிறார்கள். இதற்காகவாவது தமிழ் மொழி வெல்ல வேண்டும்.
ஜப்பான் மொழி உருவானது தமிழிலிருந்துதான். அந்த மொழிக்கு வேர் சொல்லை கொடுத்தது தமிழ்தான் என்று அந்நாட்டு அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர். உலகின் எல்லா மொழிகளும் மனிதர்களால்தான் பேசப்பட்டிருக்கும். ஆனால் என்னுடைய மொழியான தமிழ் மட்டும்தான் இறைவனால் பேசப்பட்ட மொழியாகும்.
சிவபெருமானே பேசிய மொழி தமிழ்மொழிதான். முதல் தமிழ் சங்கத்தின் தலைவனாக இருந்து தமிழை வளர்த்தது சிவபெருமான்தான். எங்களுடைய இறைவனுக்கு தமிழ் இறைவன், தமிழ் கடவுள் என்றுதான் பெயர். 12 ஆழ்வார்களும் பாடியது அனைத்தும் தமிழ் பாசுரங்கள்தானே? அத்தனையும் பெருமாளை பற்றி" என்று பேசியுள்ளார் சீமான்.
-
இனி யாருக்காக அரசியல் செய்யணும்.. கலக்கத்தில் சீமான்.. லைம்லைட்டை இழந்து நிற்கும் நாம் தமிழர்? -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications