சைதாப்பேட்டையில் தலித் மக்களுக்கு தனியாக குடியிருப்பு? கு.பா. கிருஷ்ணன் விளக்கம்
திருச்சி: சென்னை சைதாப்பேட்டையில் குடியிருப்பில் தலித் மக்களுக்கு தனியாக குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது இதற்கு காரணம் தவெக MLA என குற்றம் சாட்டி உள்ளனர் குறித்த கேள்விக்கு? சென்னையில் ஆட்சியில் இருந்த பலர் ஊழல் செய்துள்ளனர். பதவி பறிபோனவர்கள் ஆதங்கத்தில் மக்களை தூண்டிவிட்டு கொண்டு உள்ளனர். எம்எல்ஏ ந்து ஒருமதாம் கூட ஆகவில்லை அவர் எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு. பா. கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, முதல்வர் விஜய் எனக்கு அமைச்சருக்கு நிகரான வாரியத்தை வழங்கி உள்ளார்.. அவருக்கு நன்றி.. கிராமப்புற மக்கள் நகர்புற வருகின்றனர் அவருக்கு தங்க இடம் கிடையாது அவர்களுக்கு வீடு கொடுத்து மக்களோடு மக்களாக வாழவைக்க எனக்கு இந்த துறை கொடுத்து உள்ளனர்.

பயனாளிகளை கண்டறிய மாவட்ட ஆட்சியர் மூலம் குழு அமைக்கப்பட்டு விண்ணப்பம் பெறப்பட்டு சரிபார்க்கப்படுவார்கள். சைதாப்பேட்டையில் குடியிருப்பில் தலித் மக்களுக்கு தனியாக குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது இதற்கு காரணம் தவெக எம்எல்ஏ (கிருஷ்ணன்) என குற்றம் சாட்டி உள்ளனர் குறித்த கேள்விக்கு? சென்னையில் ஆட்சியில் இருந்த பலர் ஊழல் செய்துள்ளனர். பதவி பறிபோனவர்கள் ஆதங்கத்தில் மக்களை தூண்டிவிட்டு கொண்டு உள்ளனர். எம்எல்ஏ ந்து ஒருமதாம் கூட ஆகவில்லை அவர் எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும் என்றார்.
அருண் ஐபிஎஸ்க்கு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் பதவி வழங்கியது குறித்த கேள்விக்கு? நேர்மையான அதிகாரிகள் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். எங்கள் தலைவர் நன்றாக ஆய்வு செய்த பிறகு பதவி வழங்கி உள்ளார் என்றார்.
தேர்தல் நேரத்தில் அருண் மீது புகார் அளித்துள்ளனர் என்ற கேள்விக்கு? அதிகாரிகள் ஒருபக்கமாக்க சாயக்கூடாது என புகார் அளித்தோம் என்றார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைவது குறித்த கேள்விக்கு? எங்கள் தலைவரை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள் அவர்களை எப்படி வேண்டாம் என கூற முடியும் என்றார். குதிரை பேரம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது என்ற கேள்விக்கு? குதிரை பேரம் என்றால் என்ன.. நாங்கள் என்ன குதிரை வாங்க அரேபியா சென்று உள்ளோமா என கு. ப. கிருஷ்ணன் பதில் அளித்தார்
மேலும் முதல்வர் விஜய் விரைவில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வருகைதர உள்ளார் தேதி நேரம் பின்னர் அறிவிக்கப்படும். என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications