விஜய் கெஞ்சி கேட்டும் திருந்தாத ரசிகர்கள்.. வாகனத்தை பின் தொடர்ந்ததால் விபத்துகளில் சிக்கி படுகாயம்!
திருச்சி: திருச்சியில் இருந்து காரில் தஞ்சாவூருக்கு சென்ற தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை, அவரது ரசிகர்கள் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர். விஜய்யை பின் தொடர்ந்த வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ்கள் அலறியபடி வந்தன.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூர், செங்கிப்பட்டி அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த விஜய், சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

விஜய் வேனில் சென்றபோது அவரை பார்ப்பதற்காக வழிநெடுக தவெக தொண்டர்கள் திரண்டிருந்தனர். சில தவெக தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் விஜய்யின் வாகனத்தை பைக்கில் விரட்டிச் சென்றனர். ஹெல்மெட் அணியாமல், சாலை விதிகளை மதிக்காமல் ஆபத்தான முறையில் பலர் பைக்கில் பின்தொடர்ந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து சிலர் விபத்தில் சிக்கினர்.
விபத்தில் சிக்கிய இளைஞரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்தச் சம்பவங்களால் தஞ்சை - திருச்சி சாலையில் ஆம்புலன்ஸ்கள் அலறியபடியே சென்றன.
இதில் இளைஞர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தன்னை வாகனத்தில் பின்தொடர வேண்டாம் என்று வேலூர் கூட்டத்தில் விஜய் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் தவெகவினர் விஜய்யை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சில நாட்களாக வெளியே தலைக்காட்டாமல் இருந்த தவெக தலைவர் விஜய், அதன்பிறகு புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு, அதனைத் தொடர்ந்து, ஈரோடு, சேலம் என கூட்டங்களில் பேசி வருகிறார். விஜய் வருகையின் போது ஏராளமான ரசிகர்கள் அவரது வாகனத்தைப் பின்தொடர்வதால் போக்குவரத்து பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
விஜய், ஒவ்வொரு முறையும் கூட்டத்திற்கு செல்லும்போது, அவரின் வாகனத்தின் பின்னால், பக்கவாட்டில் ரசிகர்கள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. இது கட்சிக்கும், விஜய்க்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது. விஜய் வேலூரில் தன்னை பின்தொடர வேண்டாம் எனக் கெஞ்சியும் இன்றும் ஏராளமானோர் அவரைப் பின்தொடர்ந்து சென்று விபத்துகளில் சிக்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications