வேளாங்கண்ணிக்கு ரயிலில் போக போறீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு
திருச்சி: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 26, 28 மற்றும் செப்டம்பர் 6, 8 ஆகிய தேதிகளில் விழா கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கிறித்தவ புனித யாத்திரை தலங்களில் முக்கியமானது வேளாங்கண்ணி. நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.. வேளாங்கண்ணியில் உள்ள புனித அன்னை மேரி ஆலயம், நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை மையங்களில் ஒன்று. இது "கிழக்கின் லூர்து" என பிரபலமாக மக்களால் அழைக்கப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்தே இந்த ஆலயம் இருக்கிறது.

ஆண்டுதோறும் 2 கோடி பக்தர்கள் இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இங்கு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் 30 லட்சம் மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள் பெரும்பாலான பக்தர்கள் வேளாங்கண்ணி மாதா அன்னையின் திருவருளை பெற நடை பயணமாகவே இவ்வாலயத்தை அடைவார்கள்.இத்திருவிழாவின் 11-வது நாளான செப்டம்பர் 8 ஆம் தேதியுடன் விழா நிறைவு பெறும். வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "வேளாங்கண்ணி விழா கூட்ட நெரிசலைத் தவிா்க்க, வரும் 26 ஆம் தேதி லோகமான்ய திலக் டொ்மினிஸிலிருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் லோகமான்ய திலக் டொ்மினஸ் - வேளாங்கண்ணி விழா கால சிறப்பு ரயிலானது (01161), அடுத்த மூன்றாம் நாள் வேளாங்கண்ணிக்கு இரவு 8.35-க்கு வந்து சேரும்.
மறுமார்க்கமாக, வரும் 28 ஆம் தேதி வேளாங்கண்ணியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வேளாங்கண்ணி - லோகமான்ய திலக் டொ்மினஸ் விழாக் கால சிறப்பு ரயிலானது (01162), அடுத்த நாள் மாலை 4.30 மணிக்கு லோகமான்ய திலக் டெர்மினஸை சென்றுவிடும்.
இதேபோல, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி லோகமான்ய திலக் டெர்மினிஸிலிருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் லோகமான்ய திலக் டெர்மினஸ் - வேளாங்கண்ணி விழாக்கால சிறப்பு ரயிலானது (01163) அடுத்த மூன்றாம் நாள் வேளாங்கண்ணிக்கு நள்ளிரவு 12.30-க்கு வந்து சேரும்.
மறுமார்க்கமாக, வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி வேளாங்கண்ணியிலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்படும் வேளாங்கண்ணி - லோகமான்ய திலக் டெர்மினஸ் விழாக் கால சிறப்பு ரயிலானது (01164), மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு லோகமான்ய திலக் டெர்மினஸை சென்றடையும்.
இந்த ரயில்களானது, லோகமான்ய திலக் டெர்மினஸிலிருந்து புறப்பட்டு தானே, கல்யாண், லோனாவாலா, புணே, டான்ட், சோலாப்பூா், கலபுா்கி, வாடி, ராய்ச்சூா், மந்த்ராலயம் சாலை, குண்டக்கல், தாடிபத்ரி, கடப்பா, ரேணிகுண்டா, காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து சேரும்" இவ்வாறு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications