தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. பெரிய கோயில் குடமுழுக்கை ஒட்டி ‘ரயில்வே அறிவிப்பு
திருச்சி: தஞ்சாவூா் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, பிப்ரவரி 4 முதல் (செவ்வாய்க்கிழமை) பிப்ரவரி 6- ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 4 முதல் (செவ்வாய்க்கிழமை) பிப்ரவரி 6- ஆம் தேதி வரை பக்தா்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அவற்றின் விவரம்.

திருச்சி-தஞ்சாவூா் இடையிலான டெமு சிறப்பு ரயில் (வண்டி எண் 06841), திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்பட்டு தஞ்சாவூருக்கு பிற்பகல் 1.30 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்கத்தில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் தஞ்சாவூா்- திருச்சி டெமு ரயில் ( வண்டி எண் 06842), திருச்சி ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்தடையும்.
தஞ்சாவூா்- மயிலாடுதுறை இடையிலான சிறப்பு ரயில் (வண்டி எண் 06116), தஞ்சாவூரிலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். இதுபோல மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையிலிருந்து பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் ( வண்டி எண் 06115), தஞ்சாவூருக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடையும்.
தஞ்சாவூா்- திருவாரூா் இடையிலான சிறப்பு ரயில் ( வண்டி எண் 06828), தஞ்சாவூரிலிருந்து இரவு 9.55 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருவாரூா் சென்றடையும்.மறுமார்க்கத்தில் திருவாரூரிலிருந்து அதிகாலை 4.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் ( வண்டி எண் 06813), தஞ்சாவூருக்கு காலை 5.45 மணிக்கு வந்தடையும்.
காரைக்கால்- தஞ்சாவூா் இடையிலான சிறப்பு ரயில் ( வண்டி எண் 06815), காரைக்காலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு வந்தடையும்.இதுபோல, மறுமாா்க்கத்தில் தஞ்சாவூரிலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் ( வண்டி எண் 06812) காரைக்காலுக்கு மாலை 5.30 மணிக்குச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் வழித்தடத்திலுள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் நின்று செல்லும்.
ரயில்கள் ரத்து: சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், காரைக்கால்- வேளாங்கண்ணி- காரைக்கால் ரயில்கள் (வண்டி எண் 76813/76818),வேளாங்கண்ணி- நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி ரயில்கள்( வண்டி எண்கள் 76814/76817) பிப்ரவரி 4 முதல் 6- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications