பிளேடினால் உடம்பெல்லாம் கிழித்து கொண்ட அகதிகள்.. மாத்திரைகளை விழுங்கி.. திருச்சி ஜெயிலில் பரபரப்பு
திருச்சி சிறையில் 16 அகதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்
திருச்சி: இலங்கை அகதிகள் 16 பேர் திருச்சி சிறப்பு முகாமில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்..
இவர்களுடன் வங்காளதேசம், நைஜீரியா, சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகளும் உள்ளனர்.

வழக்கு
இவர்கள் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.. குறிப்பாக, பொய் வழக்கில் நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம் என்றும், தண்டனை காலம் முடிந்தும் சிறப்பு முகாம் என்ற ஜெயிலுக்குள் அடைத்து வைத்துள்ளனர் என்றும், ஜாமீனில் வந்தவர்களையும் கைது செய்து அடைத்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்..

போராட்டம்
மேலும் இந்த பெரும் தொற்று காலத்திலாவது தங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்த போராட்டத்தை செய்து வந்தனர்.. அந்த வகையில் கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தின.. இந்த போராட்டத்தின் காரணமாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விரக்தி
பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லாததாலும், தொடர்ந்து கேஸ்கள் மட்டும் போட்டதாலும் விரக்தியிலும் வேதனையிலும் அகதிகள் இருந்தனர்.. இதன் உச்சக்கட்ட வெறுப்பாக, நேற்று முகாமுக்குள்ளேயே, இலங்கை அகதிகள் 14 பேர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்... சிலர் தூக்கு போட முயன்றனர்.. மேலும் ஒன்றிரண்டு பேர் வயிறு மற்றும் கழுத்து பகுதிகளை அறுத்து கொண்டனர்... இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணை
இந்த தகவலறிந்ததும் ஜெயிலர்கள், மற்றும் கேகேநகர் போலீசாரும் விரைந்து சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 16 பேரையும் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. தகவல் அறிந்த திருச்சி கலெக்டர் சிவராசு முகாமிற்கு நேரிலேயே சென்று விசாரணை நடத்தினார்... அவர்களுக்கு உடம்பை கிழித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு, கூர்மையான பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன? என்று விசாரித்தனர்.. இவர்களுக்கு மாத்திரைகள் எப்படி கிடைத்தன என்றும் விசாரித்துள்ளனர்..

உடல்நலம்
எப்போதாவது உடல்நலம் சரியில்லாமல் போனால், முகாமிலேயே காய்ச்சல், தலைவலிகளுக்கு மாத்திரைகள் தரப்படுமாம்.. அதை அதிக அளவில் வாங்கி வைத்து கொண்டுள்ளனர்.. அந்த மாத்திரைகளை தின்றுதான் அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது... தொடர்ந்து விசாரணையும் நடக்கிறது.












Click it and Unblock the Notifications