வளைகுடாவில் பணிபுரிவோருக்கு “ஷாக்”.. திருச்சி - இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து
திருச்சி: திருச்சியில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு இணைப்பு விமானம் மூலம் சென்று வரும் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிண்டோ, ஸ்கூட் ஆகிய நிறுவனங்கள் இந்த விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கி வருகின்றன.

குறிப்பாக திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பல ஆண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து இலங்கைக்கு பிட்ஸ் ஏர் நிறுவனம் தனது சேவையை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அதன் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கு முன் திருச்சியில் இருந்து இலங்கைக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விமானம் மூலம் இயக்கப்பட்டது. குறைந்த காலமே இயக்கப்பட்ட அந்த விமான சேவையும் பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்று வந்தது

காலை மற்றும் மதிய நேரத்தில் இரு முறை விமானம் இலங்கைக்கு சென்று வந்தது. இதில் திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் இலங்கை வழியாக செல்வது வாடிக்கை. இந்த பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் நிலை இருந்து வந்தது. திருச்சி வரும் பயணிகள் அதிக அளவில் இந்த விமான சேவையினை பயன்படுத்தி வந்தனர்.
தென் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்லும் பயணிகள் அதிகம் என்ற காரணத்தினால் அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமான சேவைகளை பயன்படுத்தும் நிலை இருந்து வந்தது. இவ்வாறு திருச்சி விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் வளைகுடா நாடுகளுக்கு இருந்தாலும் இலங்கை சென்று அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு கட்டணம் குறைவாக இருந்த காரணத்தாலும் பயண நேரம் குறைவு என்பதாலும் இதனை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கடந்த 6 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 2 சேவைகள் வழங்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தற்போது ஒரு சேவை மட்டும் வழங்கி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி செல்லும் நிலை ஏற்படுகிறது.
விமான சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் ஒரு விமான சேவையை மட்டுமே நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை சீர்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் தனது இரண்டாவது சேவையை வழங்குவதுடன் ரத்து செய்யப்பட்ட இரண்டு நாட்கள் விமான சேவைகளும் மீண்டும் வழங்கிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து புதிய விமான நிறுவனங்களின் சேவைகள் இலங்கைக்கு இயக்கப்பட்டால் இது போன்ற சிரமங்கள் பயணிகளுக்கு ஏற்படாது என கூறப்படுகிறது.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications