திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடடே வாக்குறுதி.. மனதைத் 'தொட்ட' வேட்பாளர்.. இப்படியும் சிலர் நல்லதா யோசிக்கிறாங்க!

Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்: மணிகண்டம் ஒன்றியப் பகுதி கல்விக்கூடம் நிறைந்த பகுதியாக மாற்றப்படும் என்று ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பொதுமக்களிடம் உறுதி அளித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர், தாயனூர், புங்கனூர், குமாரவயலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

 அமைச்சராக இருக்கையில்..

அமைச்சராக இருக்கையில்..

அதனைத்தொடர்ந்து நாச்சிக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பொம்மணி சமுத்திரம் காளியம்மன் கோவில் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அவர் பேசுகையில், போதாவூரில் அமைந்திருக்கும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அ.தி.மு.க. ஆட்சியில் நான் அமைச்சராக இருக்கும்போது அமைக்கப்பட்டது.

 பெரும் சிரமம்

பெரும் சிரமம்

தற்போது விவசாயிகளின் முக்கிய பாசன வாய்க்காலான உய்யகொண்டான் வாய்க்காலை தூர் வாரி கரைகள் உயர்த்தப்படும். அல்லித்துறை, சோமரசம்பேட்டை, உய்யகொண்டான் திருமலை, புத்தூர் நான்கு ரோடு வரை உள்ள பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாது பொது மக்களுக்கும் பெரும் சிரமமாக உள்ளது. எனவே உய்யகொண்டான் வாய்க்காலை தூர் வாரி அல்லித்துறையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை வரை ஒருவழி சாலையாக மாற்றி தர நடவடிக்கை எடுப்பேன்.

 போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், சாலை, கழிவுநீா் வசதி முறையாக செய்து தரப்படும். மணிகண்டம் ஒன்றியப் பகுதி கல்விக்கூடம் நிறைந்த பகுதியாக மாற்றப்படும். விவசாயிகளின் முக்கிய பாசன வாய்க்காலான உய்யக்கொண்டான் வாய்க்காலைத்தூா் வாரி, கரைகள் உயா்த்தப்படும். அல்லித்துறை, சோமரசம்பேட்டை, உய்யக்கொண்டான் திருமலை, புத்தூா் நான்குச் சாலை வரை உள்ள பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது" என்று அவர் பேசினார்.

 தீவிர பிரசாரம்

தீவிர பிரசாரம்

முன்னதாக, நாச்சிக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பொம்மணி சமுத்திரம் காளியம்மன் கோயில் அருகில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு வேட்பாளா் கு.ப.கிருஷ்ணன் மலா் தூவி மரியாதை செய்தாா். அவருடன் ஒன்றிய செயலாளர்கள் முத்துகருப்பன், ஜெயகுமார் அழகேசன், பாரதீய ஜனதா கட்சியின் மண்டல பொறுப்பாளர் ராஜேந்திரன், பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

English summary
Srirangam admk candidate kp krishnan given importance to education in his campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X