‛போங்க’.. கடிந்துகொண்ட முதல்வர்.. திருச்சி சிவா எம்பியை சந்தித்த கேஎன் நேரு.. பின்னணி இதுதான்!

திருச்சி சிவா எம்பியின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் கேஎன் நேருவின் ஆதரவாளர்கள் இடையே போலீஸ் நிலையத்தில் கடும் மோதல் நடந்தது.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக எம்பி திருச்சி சிவாவின் வீட்டில் நேற்று முன்தினம் தாக்குதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக திருச்சி சிவா எம்பி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே போலீஸ் நிலையத்தில் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிலையில் திருச்சி சிவா எம்பியை அமைச்சர் கேஎன் நேரு இன்று திடீரென சந்தித்தார். இதன் பின்னணியில் முதல்வர் ஸ்டாலின் கடிந்துகொண்ட விஷயம் உள்ளது தெரியவந்துள்ளது.

திருச்சியில் பல்வேறு திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேரு நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். எஸ்பிஐ காலனியில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இதில் மாநிலங்களவை எம்பியான திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே விழாவுக்காக சிவாவின் வீடு அமைந்துள்ள நியூ ராஜா காலனி வழியாக அமைச்சர் கேஎன் நேரு உள்ளிட்டவர்கள் சென்றனர்.

சிவா எம்பியின் வீடு மீது தாக்குதல்

சிவா எம்பியின் வீடு மீது தாக்குதல்

அப்போது சிவாவின் ஆதரவாளர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினர். இந்நிலையில் சிவாவின் வீட்டிற்கு வந்த சிலர் அங்கிருந்த காரை தாக்கினர். வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இவர்கள் அமைச்சர் கேஎன் நேருவின் ஆதரவாளர்கள் என கூறப்பட்டது. திமுகவினர் இடையேயான இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் நிலையத்தில் மோதல்

போலீஸ் நிலையத்தில் மோதல்

இதுதொடர்பான விவகாரம் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்துக்கு சென்றது. அங்கும் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியானது. மேலும் திருச்சி சிவாவின் ஆதரவாளர் சூரியகுமார் கொடுத்த புகாரில் அமைச்சர் கேஎன் நேருவின் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், வட்டச செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். அதன்பிறகு அவர்கள் போலீசில் சரணமடைந்தனர்.

திருச்சி சிவா வருத்தம்

திருச்சி சிவா வருத்தம்

இந்நிலையில் தான் பஹ்ரைன் சென்றிருந்த திருச்சி சிவா நேற்று திருச்சி வந்தார். அப்போது தாக்குதல் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛இப்போது நான் எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது. கட்சி பெரியது. இருப்பினும் இந்த நிகழ்வுகள் மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி காயமடைந்துள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. கடுமையான மன சோர்வில் உள்ளேன்'' என வருந்தினார்.

திடீர் சந்திப்பு

திடீர் சந்திப்பு

இந்நிலையில் தான் இன்று மாலை திருச்சியில் உள்ள சிவா எம்பியின் வீட்டுக்கு நகராட்சி துறை அமைச்சர் கேஎன் நேரு திடீரென்று சென்று அவரை சந்தித்து பேசினார். இந்த வேளையில் நடந்த சம்பவத்துக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காது எனக்கூறி திருச்சி சிவா எம்பியை அமைச்சர் கேஎன் நேரு சமாதானம் செய்தார்.

பின்னணியில் முதல்வர் ஸ்டாலின்

பின்னணியில் முதல்வர் ஸ்டாலின்

திருச்சியை பொறுத்தமட்டில் திமுகவின் முகமாக சிவா எம்பி மற்றும் கேஎன் நேரு ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் தான் இந்த மோதல் நடந்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் திருச்சி சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக அரசை விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் திருச்சி சிவா எம்பியை அமைச்சர் கேஎன் நேரு சந்தித்து சமாதானம் பேசினார். மோதல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்து கடிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சி சிவா எம்பியை சந்தித்து சமாதானம் செய்யும்படி கேஎன் நேருவிடம் கூறினார். இந்த அமைச்சர் கேஎன் நேரு, திருச்சி சிவா எம்பியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+