ராஜஸ்தானில் தமிழக போலீசார் சிறைபிடிப்பா? திருச்சி ஆணையர் கொடுத்த பரபர விளக்கம்!
நகை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழக போலீசார் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
திருச்சி: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க ராஜஸ்தான் சென்ற இடத்தில் தமிழக தனிப்படை போலீசார் அந்த மாநில போலீசாரால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சியில் திருட்டு சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த சோனியா மற்றும் அவரது கணவரை திருச்சி காவல்துறையினர் தேடி வந்தனர்.
ஆனால் அவர்கள் ராஜஸ்தான் தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த திருட்டு கும்பலை பிடிக்க ராஜஸ்தானுக்கு செல்ல திருச்சி போலீசார் முடிவு செய்தனர்.

ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்பதாக
அதன்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான 12 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்தது. ராஜஸ்தானில் உள்ள ஹிஜ்மர் நகரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தமிழக போலீசார் மீது ராஜஸ்தானை சேர்ந்த அந்த தம்பதி அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தது. அந்த புகாரில் , திருட்டு வழக்கில் கைது செய்யாமல் இருப்பதற்காக தமிழ்நாடு போலீசார் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்பதாக கூறப்பட்டு இருந்தது.

தமிழக போலீசார் சிறைபிடிப்பு
இதையடுத்து, தமிழக போலீசார் 12 பேரையும் ராஜஸ்தான் போலீஸ் சிறை பிடித்ததாக தகவல் வெளியானது. திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க சென்ற இடத்தில் தமிழக போலீசார் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நகை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார் சிறைபிடிக்கப்பட்டதாக பரவிய தகவலில் உண்மை இல்லை என்று தமிழக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

காவல் ஆணையர் விளக்கம்
இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா செய்தியாளர்களுக்கு சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 7 வழக்குகளில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளை கடந்த நவம்பர் மாதம் திருச்சி போலீஸ் கைது செய்தது. அதில் அவர்களின் கை ரேகைகளும் ஒத்துபோனது. அது சம்பந்தமாக அவர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் கொள்ளையடித்த பொருட்கள் ராஜஸ்தானில் கொண்டு போய் கொடுத்து விட்டனர்.

15 போலீசார் சென்றனர்
எனவே அந்த நகைகளை மீட்பதற்காக ஏசிபி கென்னடி தலைமையில் 15 போலீசார் சென்றனர். கடந்த 2 ஆம் தேதி ராஜஸ்தான் சென்றடைந்தனர். 300 கிராம் நகைகள் மீட்கப்பட்டது. அடுத்து இன்னொருவரிடம் நகைகளை மீட்க பேசிக்கொண்டு இருந்தோம். அவர்கள் இங்கே உள்ள வழக்கின் படி 100 சவரன் கொடுக்க வேண்டும். ஆனால் அவ்வளவு கொடுக்க முடியாது. 50 சவரன் தான் கொடுப்பேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். அதை பணமாகத்தான் கொடுக்க முடியும் என்று சொல்லியிருந்தனர். அதற்குள் நமது போலீசார் இங்கே வரவேண்டியிருந்தது.

பணத்தை கேட்கிறார்கள் என்று திரித்து விட்டனர்
இதனால், அழைத்து செல்லப்பட்ட குற்றவாளிகளை அழைத்துக்கொண்டு 3 போலீசார் விமானம் மூலமாக தமிழ்நாடு வந்துவிட்டனர். ராஜஸ்தானில் இருந்த ஏனைய 12 போலீசார் பணத்தை வாங்க சென்ற போது அதை தவறாக போலீசார் எங்களிடம் பணத்தை கேட்கிறார்கள் என்று திரித்து விட்டனர். போலீசார் பணத்தை வாங்க செல்லும் போதே.. அங்குள்ள ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்ததாக தெரிகிறது. நமது போலீசார் சென்ற போது அங்குள்ள அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர்.

தவறாக கூறியிருக்கிறார்கள்
அதன்பிறகு எங்களிடம் பேசிய பிறகு அலுவல் ரீதியாகத்தான் போயிருக்கிறார்கள்..குற்றம் செய்து எடுத்துக்கொண்டு சென்ற நகை.. அதை வாங்கத்தான்...சென்றார்கள். இதை தவறாக கூறியிருக்கிறார்கள் என்று நாங்கள் விளக்கம் அளித்தோம். அதன்பிறகு அங்குள்ள அதிகாரிகள் வழக்கு விவரங்களை கேட்டார்கள். அதை ஆய்வு செய்த பிறகு வழக்கில் உள்ள நகைகளை மீட்கவே வந்து இருக்கிறார்கள் என்று உறுதி செய்து நமது போலீசாரை அங்கிருந்து அனுப்பி விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications