சடசடவென கேட்ட சத்தம்.. திருச்சி கொள்ளிடம் ஆற்றில் விழுந்து மூழ்கிய மின்கோபுரம்.. என்ன நடந்தது?
திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரால் மண்அரிப்பு ஏற்பட்டு உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் இருந்தது. இதனை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலையில் மின்கோபுரம் சரிந்து விழுந்து தண்ணீரில் மூழ்கியது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் தான் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நேப்பியர் பாலம் அருகே ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் கொண்ட உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கோபுரம் என்பது கொள்ளிடம் ஆற்றுக்குள் அமைந்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் அதிகமாக வருகிறது. இதனால் மின்கோபுரம் அமைந்துள்ள பகுதியில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கோபுரத்தின் அடிப்பகுதி பலவீனமானதோடு மின்கோபுரம் திடீரென்று சாய்ந்து நின்றது. எப்போது வேண்டுமானாலும் மின்கோபுரம் சரிந்து தண்ணீக்குள் விழலாம் என்ற நிலை உருவானது.
இதுபற்றி உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மின்கோபுரத்தை சரிசெய்யும் பணி தொடங்கி நடந்தது. இத்தகைய சூழலில் மின்வாரிய பணியாளர்களின் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இதனால் இன்று அதிகாலை 5 மணியளவில் சாய்ந்து நின்ற மின்கோபுரம் சரிந்து தண்ணீருக்குள் விழுந்து மொத்தமாக மூழ்கியது. மேலும் மின்கோபுரத்தின் வயர்கள் நேப்பியர் பாலத்தின் மீது விழுந்தன. முன்கூட்டியே மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நேப்பியர் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் தான் கொள்ளிடம் ஆற்றின் மின்கோபுரம் சரிந்து விழுந்துள்ளதால் மின்சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று வழியாக மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே கொள்ளிடம் ஆற்றுக்குள் உயர் மின்னழுத்த கோபுரம் சரிந்து விழும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications