Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியில் நிச்சயம் செய்த பெண்.. நண்பனுடன் பார்க்க சென்றது தான் சேலம் இளைஞருக்கு கடைசி பயணம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சேலம் மாவட்டம், மேட்டூர் மூலக்காடு அருகே உள்ள சானாரப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார்.இவருக்கு 2-வது திருமணம் செய்ய திருச்சி உறையூரில் பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தார்கள். நிச்சயம் செய்த பெண்ணை பார்க்க நண்பருடன் மோகன்ராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால் அது தான் அவருக்கும், அவரது நண்பருக்கும் கடைசி பயணமாகி இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

வாழ்க்கையில் யாருக்கு என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. திருமண வாழ்க்கையை பொறுத்தவரை இவருக்கு இவர் தான் என்று பெற்றோர் முடிவு செய்தாலும், அல்லது அவர்களே முடிவு செய்தாலும், உண்மையில் நடப்பது தான் நடக்கிறது. அதாவது அவர்கள் நினைக்காத ஒன்றே சில நேரங்களில் நடக்கிறது.

The last trip for a Salem youth was to visit his betrothed in Trichy

தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் பயணிப்பது நல்லது இல்லை.. ஏனெனில் புதிய சாலையில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, வாகன ஓட்டிகள் தடுமாற வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் தான் திருச்சியில் நிச்சயம் செய்த பெண்ணை பார்க்க சென்றபோது சேலத்தைச் சேர்ந்தவர் நண்பருடன் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் மூலக்காடு அருகே உள்ள சானாரப்பட்டியை சேர்ந்த 27 வயதாகும் மோகன்ராஜ் என்பவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இதையடுத்து இவருக்கு 2-வது திருமணம் செய்ய திருச்சி உறையூரில் பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தார்கள்.

அந்த பெண்ணை பார்ப்பதற்காக தனது நண்பர் தினேஷ்குமார்(28) என்பவருடன் சேலத்தில் இருந்து மோகன்ராஜ் இருசக்கர வாகனத்தில் வந்தார். திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் தொட்டியத்தை அடுத்த வரதராஜபுரம் பிரிவு சாலை அருகே வாகனம் வந்தது. அந்த வழியாக வந்த வாகனம், இருசக்கர வாகனம் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தொட்டியம் நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிச்சயம் செய்த பெண்ணை பார்க்க சென்ற வாலிபர் உள்பட 2 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+