திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்த.. முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் சஸ்பெண்ட்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

திருச்சி: பணியின் போது அலட்சியமாக இருந்த முன்னாள் அமைச்சர் பி. வளர்மதியின் மகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தி.மு.க அரசு திட்டமிட்டே இதனை செய்துள்ளது என்று அ.தி.மு..க..வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு அருகே ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால்பண்ணையில் இருந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

பொறியியல் மேலாளர்

பொறியியல் மேலாளர்

இந்த பண்ணையில் பொறியியல் மேலாளராக ஹரிராம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அ.தி.மு.க ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பணியாற்றிய பி.வளர்மதியின் இரண்டாவது மகன் ஆவார். கொட்டப்பட்டு அருகே உள்ள பால் பண்ணையில் 5 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பாய்லர் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார்

சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார்

கடந்த வாரம் அந்த பாய்லர் திடீரென பழுதாகியது. அதனை பராமரித்து பழுது பார்க்கும் பொறுப்பு ஹரிராமிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் பாய்லர் பழுதாகிய நிலையிலும் ஹரிராம் 2 நாட்கள் விடுமுறையில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹரிராம் திடீரென சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார்.

அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பு

அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பு

பணியின் போது அலட்சியமாக இருந்தாகவும், தனது பொறுப்பில் இருந்து தவறியதற்காகவும் திருச்சி ஆவின் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி பொறியாளர் மேலாளர் ஹரிராமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் மகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

திட்டமிட்டே சோதனை நடத்தப்படுகிறது

திட்டமிட்டே சோதனை நடத்தப்படுகிறது

முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் ஹரிராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தி.மு.க அரசு திட்டமிட்டே இதனை செய்துள்ளது எனவும் அ.தி.மு..க..வினர் குற்றம் சாட்டுகின்றனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தொடங்கி தற்போது டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் திட்டமிட்டே சோதனை நடத்தப்படுகிறது.

விசாரிக்க வேண்டும்

விசாரிக்க வேண்டும்

இதேபோல்தான் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் ஹரிராம் விஷயத்திலும் நடந்துள்ளது என்று புகார் கூறும் அதிமுகவினர் சிலர் இது தொடர்பாக உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

English summary
The son of a former minister of development who was negligent during the mission has been suspended. The DMK alleges that the DMK government did this on purpose
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X