திருச்சி வழியாக போறீங்களா? ஜங்ஷன் மேம்பாலத்தில் நடக்கும் வேலை! ரூட்டை மாற்றி விட்ட அதிகாரிகள்! கவனம்
திருச்சி : தென் மாவட்டங்களை வட மாவட்டங்களோடு இணைப்பதில் திருச்சி முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் காரணமாக திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் சந்திப்பு சாலை மேம்பாலம் மூடப்பட்டுள்ள நிலையில் மாற்று வலியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மிகவும் முக்கியமான மாவட்டமாகும். மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் முக்கிய சந்திப்பாக இருக்கிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை என தென் மாவட்டங்களை வட மாவட்டங்களோடும், புதுக்கோட்டை தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களையும், கோவை, தர்மபுரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் புள்ளியாக திருச்சி இருக்கிறது.
குறிப்பாக கிழக்கு மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், ரயில்கள் திருச்சி வழியாகவே சென்னை செல்ல வேண்டி இருக்கும். அந்த அளவு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த திருச்சியில் தற்போது முக்கிய பாலமான திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்தில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாற்று வழித் தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகன வழித்தடங்கள் :
* சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், வழித்தடங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் திண்டுக்கல் மற்றும் அதன் மார்க்கமாக செல்லும்போது மதுரை புறவழிச்சாலை வழியாக சென்று மணிகண்டம் வண்ணாங்கோவில் வழியாக செல்ல வேண்டும்.
* திண்டுக்கலில் இருந்து சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கமாக செல்லக்கூடிய கனரக வாகனங்கள் வண்ணாங்கோவில் மணிகண்டம் வழியாக மதுரை புறவழிசாலை சென்றடைந்து மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.
* சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், வழித்தடங்களில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் (குறிப்பு மாநகர பேருந்து தவிர) மாற்றுப் பாதையாக மன்னார்புரம். TVS டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்திரையர் சிலை அனைத்து மகளிர் காவல் நிலையம், வெஸ்ட்ரி ரவுண்டானா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரியமிளகுபாறை வழியாக சென்று வ.உ.சி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
* திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, தஞ்சாவூர், சேலம் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் வழக்கமாக செல்லும் குரு ஹோட்டல் ஜங்ஷன், முத்திரையர் சிலை, தபால் நிலையம் சிக்னல், TVS டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.
* திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வ.உ.சி சாலை, பெரியமிளகுபாறை கோரிமேடு வழியாக புதிய மேம்பாலம் கீழ் சென்று சர்வீஸ் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
* திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து வரக்கூடிய பேருந்துகள் புதிய பாலம் ஏறாமல் கோரிமேடு, பெரியமிளகுபாறை வஉசி ரோடு வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
* மதுரை மாரக்கத்திலிருந்து வரக்கூடிய பேருந்துகள் மன்னார்புரம், அரிஸ்டோ மேம்பாலம், வழியாக பாலத்திலுள்ள ரவுண்டான வந்து ஜங்ஷன் மார்க்கமாக செல்லும் பாதையில் இறங்கி ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
* திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள், பேருந்து நிலையம் பின்புறமாக வெளியே வந்து வபசாலை, காமராஜ் சிலை ரவுண்டானா, அரிஸ்டோ மேம்பாலம் மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும்.
* எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டியிலிருந்து வரும் இலகுரக வாகளங்கள், இருசக்கர வாகனங்கள் ஒருவழிப்பாதையாக புதிய மேம்பாலம் வழியாக பாலத்திலுள்ள ரவுண்டான வந்து ஐங்ஷன் மார்க்கமாக செல்லும் பாதையில் இறங்கி ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
* திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஜங்ஷனிலிருந்து மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் சொல்லும் இலகுரக வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம் அருகில் காமராஜர் சிலை ரவுண்டான வழியாக புதிய மேம்பாலம் ஏறி ஒருவழிப்பாதையாக செல்லவேண்டும் எடமலைப்பட்டிபுதூர் செல்வோர் மன்னார்புரம் சென்று வரவேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (12.10.2024 - சனிக்கிழமை ) நள்ளிரவு 12.00 மணி முதல் அமலுக்கு வரும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கூறியுள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் இந்த அறிவிப்பின்படி மாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications