அழுத்தம் கொடுத்தால் பணியும் அளவுக்கு நான் பலவீனமாக இல்லை.. விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி
திருச்சி: அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காததற்கு காரணம் அவர் மீது போடப்பட்ட அழுத்தம்தான் என்று விஜய் விமர்சித்திருந்தார். இந்த கருத்துக்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்பார் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இந்நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க மாட்டார் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பையடுத்து பல்வேறு பேச்சுகள் எழுந்தன. புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிடுகிறார் என்பதால்தான் திருமா பங்கேற்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து இன்று புத்தகத்தை வெளியிட்டு பேசிய விஜய், "விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் | போய்விட்டது; அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்" என்று பேசியிருந்தார்.
விஜய்யின் இந்த கருத்துக்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "விஜய் அம்பேத்கர் நூலை வெளியிட்டிருப்பது வரவேற்பதற்குறியது. நான் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்கததற்கு காரணம் திமுக அல்ல. அரசியல் அழுத்தம் காரணமாக இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று விஜய் பேசியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை" என்று கூறியுள்ளார்.
அதேநேரம், விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் திருமா பங்கேற்கவில்லையோ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமா, "நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு விஜய் காரணம் அல்ல" என்று கூறியுள்ளார்.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications