புரியுதா.. முதல் எதிரியே "அவங்க"தான்.. ஒரே ஒரு பொய் சொல்லிட்டேன்.. பாஜகவையே அதிர வைத்த திருமாவளவன்
திருமாவளவன் ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்புகளை சாடி உரையாற்றினார்
திருச்சி: யாரை பற்றி பேசினால் இஸ்லாமியர்கள் ரோட்டிற்கு வருவார்கள் என்று தெரிந்து தான் நபிகள் நாயகத்தை சீண்டுகிறார்கள்.. இந்து சமூகத்தின் முதல் எதிரியே பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும்தான் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விசிகவின் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இழிவான கருத்தை தெரிவித்திருந்தார்.
இது உலக அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.. பல இஸ்லாமிய நாடுகள் கண்டனமும் தெரிவித்திருந்தன..

சஸ்பெண்ட்
பாஜக கட்சியில் இருந்து நுபுர் சர்மா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார் எனினும், இஸ்லாமியர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் ஜமாத்துல் உலமா சபை கவனஈர்ப்பு மாநாட்டை நடத்தியது.இதில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு மற்றும் எம்.பிக்கள் திருமாவளவன்,வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

திருமாவளவன்
இதில், விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசிய உரை சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதன் சுருக்கம் இதுதான்: "வெளியில் ஒரு நிகழ்ச்சிக்கு போகிறேன் என்று என் அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு திருச்சிக்கு வந்திருக்கிறேன்.. இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான நிகழ்ச்சி.. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி.

சனாதன கும்பல்
இந்த தேசத்தை சனாதன கும்பலிடம் இருந்து மீட்பதற்கான ஒரு முயற்சி.. இது குறிப்பிட்ட சமூகத்தின்,மதத்தின் நிகழ்ச்சி என்பதை விட தேசத்தை பாதுகாப்பதற்காக ஓர் அறப்போர் என்கிற வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்றதில் பெருமைப்படுகிறேன். கொள்கையை சொல்லி அணிதிரட்ட முடியாதவர்கள் ஒரு சமூகத்தின் வெறுப்பை சொல்லி இன்னொரு சமூகத்தை எதிர்மறை அடிப்படையில் அணி திரட்டுவது அவர்களின் அரசியல் உத்தியாக இருக்கிறது..

ஆர்எஸ்எஸ்
யாரை பற்றி பேசினால் இஸ்லாமியர்கள் ரோட்டிற்கு வருவார்கள் என்று தெரிந்து தான் நபிகள் நாயகத்தை சீண்டுகிறார்கள்.. இந்து சமூகத்தின் முதல் எதிரியே பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும்தான் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்துவர்கள் ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை.. அப்படி ஒரு வெறுப்பு அரசியலை இஸ்லாமோ, கிறிஸ்தவமோ இந்த மண்ணில் பரப்பியது இல்லை.. அவர்கள் அன்பை போதிக்கிறார்கள்.. சகோதரத்துவத்தை போதிக்கிறார்கள்.. நல்லிணக்கத்தை போதிக்கிறார்கள்.. ஆனால் ஆர்எஸ்ஸும், சங் பரிவார்களும் திட்டமிட்டு வெறுப்பை போதிக்கிறார்கள்..
Recommended Video

சங் பரிவார்
இந்துக்களையும் முஸ்லிம்களையும் எதிரெதிர் துருவத்தில் நிறுத்த பார்க்கிறார்கள்.. அப்பாவி இந்துக்களே, ஏழை எளிய இந்துக்களே, உழைக்கும் இந்துக்களே, வறுமையில் உழலும் இந்துக்களே, ஏமாந்துவிடக்கூடாது.. இந்த மாபெரும் கவனஈர்ப்பு மாநாட்டின் மூலமாக விடுக்கிற செய்தி இதுதான்.. இஸ்லாமியர்களே ஒன்று சேருங்கள் என்று நான் அழைப்பு விடுக்கவில்லை.. இந்துக்களே ஏமாந்துவிடாதீர்கள், நீங்கள் ஒற்றுமையாக இருங்கள், இந்த சங்பரிவார்களின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாதீர்கள் இதுதான் இந்த மாநாட்டின் முக்கிய செய்தி" என்றார் திருமாவளவன்.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications