திமுக, அதிமுக ஆட்சியில் தலித்துகளுக்கு எதுவுமே செய்யவில்லையா? திருமாவளவன் சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக, அதிமுக ஆட்சியில் தலித்துகளுக்கு எதுவுமே செய்யவில்லையா என்ற கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். வன்னி அரசின் பேச்சு திரித்து சொல்லப்படுவதாக பேசிய திருமாவளவன், தவெக ஆட்சியில் தலித்துகளுக்கு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டிய விஷயங்களே ஏராளம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

சட்டசபையில் சமூகநீதித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் வன்னி அரசு, திராவிட கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலித்துகளுக்கு 60 ஆண்டு கால திராவிட ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை என்று ஆவேசமாக பேசினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், புள்ளி விவரங்களுடன் இடஒதுக்கீடு முதல் அத்தனை திட்டங்களையும் அடுத்தினார்.

Thirumavalavan

அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் கொடுத்த பதிலால் ஆதவ் அர்ஜுனா அமைதியாகினார். இருப்பினும் இந்த விவாதம் தொடர்ச்சியாக நடந்து வந்தது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், திராவிட கட்சிகளின் ஆட்சியில் தலித்துகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்று அமைச்சர் வன்னி அரசு சொல்லவில்லை.

திரித்து பேசக் கூடாது. வன்னி அரசு சொன்னது என்னவென்றால், தலித்துக்களை பொது தொகுதியில் நிற்க வைத்து வென்றுள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு திமுக, அதிமுக அளித்த பதிலும் உண்மை தான். தலித்துகளை பொது தொகுதியில் நிற்க வைத்து வென்றுள்ளோம் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் வன்னி அரசு கேட்ட கேள்வி என்னவென்றால், பொது தொகுதியில் தலித்துகளை நிற்க வைப்பது இயல்பான ஒன்றுதான்.

தலித்துகளால் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியும். ஆனால் தலித் அல்லாதவர்கள் தனித் தொகுதிகளில் நிற்க முடியாது. சட்டப்படி அது தடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கையில் வன்னி அரசு கேட்டது என்னவென்றால், போனால் போகிறது என்று பொதுத் தொகுதியில் நிப்பாட்டினீர்களா அல்லது அவர் தகுதியானவர் என்ர அடிப்படையில் நிறுத்தினீர்களா என்று கேட்டார்.

இதனை உள் அர்த்தம் வைத்து வன்னி அரசு பேசுகிறார் என்று திமுக, அதிமுக எதிர்த்தனர். வன்னி அரசு கேள்வி எழுப்பியதன் அர்த்தம் என்னவென்றால், பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிறுத்துவது இறக்கப்பட்டு செய்வது போன்ற தொனி இருக்கிறது. அப்படி அதை சொல்ல கூடாது என்றே கூறினார். தவெக ஆட்சியில் தலித்துகளுக்கு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+