அமித் ஷா, மோடி தலையை எடுப்போம்.. மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர்... கைது

மோடி, அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அமித்ஷா, மோடியின் தலையை எடுத்து விடுவோம் என்று மிரட்டிய தமுமுக பேச்சாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள லப்பை குடிக்காட்டில் கடந்த 23-ந்தேதி தமமுக சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருச்சி மாவட்ட கழகத்தின் முன்னாள் மாணவரணி செயலாரும், தலைமை கழக பேச்சாளருமான முகமது ஷெரிப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இவருக்கு வயது 24 ஆகிறது.

TMMK Administrator arrested in Trichy

கூட்டத்தில் பேசும்போது, பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பாஜகவில் ஒருத்தரையும் விட்டுவைக்காமல் சகட்டுமேனிக்கு பேசியதாக சொல்லப்படுகிறது. மோடி, அமித்ஷாவின் தலையை எடுத்து விடுவோம், நாடாளுமன்றத்தை தகர்ப்போம் என்றெல்லாம் பேசியதாக தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய முகமது ஷெரிப்பின் வீடியோ சோஷியல் மீடியாவிலும் வைரலானது. இதற்கு ஏராளமானோர் கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மங்களமேடு போலீசாரிடம் இருந்தும், பெரம்பலூர் மாவட்ட உளவுத்துறை போலீசாரிடம் இருந்தும் முகமது ஷெரிப் பேசிய முழு வீடியோவையும் சென்னை காவல்துறை தலைமையகம் கேட்டு பெற்றது. அந்த வீடியோவை முழுமையாக ஆய்வு செய்த போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

இதனையடுத்து மத உணர்வை தூண்டும் வகையிலும், பிரதமர், உள்துறைமந்திரி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதும் தெரியவந்ததையடுத்து முகமது ஷெரிப்பை 6 பிரிவுகளின்கீழ் போலீசார் கைது செய்து, பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கை அடுத்து, முகமது ஷெரீப்பை தலைமை கழக பேச்சாளர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+