பிராமணர்களுக்கு தமிழ்நாட்டில் பொண்ணே கிடைக்கல.. எங்க கிட்ட ஐடியா இருக்கு - நாராயணன் சொல்றதை கேளுங்க
திருச்சி: தமிழ்நாட்டில் 12 லட்சம் பிராமண குடும்பங்களும் 45 லட்சம் வாக்காளா்களும் உள்ள நிலையிலும் தங்களுக்கான உரிய அங்கீகாரம் இல்லை தமிழ்நாடு பிராமணா் சங்க மாநிலத் தலைவா் என்.நாராயணன் தெரிவித்து உள்ளார்.
திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பிராமணா் சங்க மாநிலத் தலைவா் என் நாராயணன் தமிழ்நாட்டில் பிராமண பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பிராமண ஆண்களுக்கு இங்கு பெண் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் இதனால் வெளி மாநிலங்களில் உள்ள பிராமண குடும்பங்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் பிராமண குடும்பங்கள் மட்டும் 12 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்த அவர், 45 லட்சம் பிராமண வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருந்தும் பிராமண சமூக மக்களுக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படுவது இல்லை என கூறினார்.

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் வரும் ஞாயிறுக் கிழமை அன்று தமிழ்நாடு பிராமணா் சங்க மகளிா் அணி மற்றும் இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த மாநாடு குறித்து திருச்சி பிரஸ் கிளப் அலுவலகத்தில் தமிழ்நாடு பிராமணா் சங்க மாநிலத் தலைவா் என் நாராயணன் செய்தியாளா்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டை பொருத்தவரை, 12 லட்சம் பிராமண குடும்பங்களும் 45 லட்சம் வாக்காளா்களும் உள்ளனா். ஆனாலும் பிராமண சமூகத்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவது கிடையாது.
பிராமண சமூகத்தில், ஆண், பெண் விகிதத்தில் பெரும் ஏற்றத் தாழ்வு நிலவி வருகிறது. பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் திருமணம் பெரும் சவாலாகி வருகிறது. எனவே, வெளி மாநிலங்களில் உள்ள பிராமண குடும்பங்களோடு திருமண பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி வருகிறோம். அதற்கு வழிகோலும் வகையில் இந்த மாநில மாநாடு நடத்தப்படுகிறது." என்று அவர் கூறினார். இந்த செய்தியாளார் சந்திப்பின்ன்போது, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில துணைத் தலைவா் என். நாகராஜன், மாநில செயலாளா் கே. செளரிராஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.












Click it and Unblock the Notifications