பொன்மலையில் உருவான நவீன ரயில் எஞ்சின் - ஊட்டி மலை ரயில் சேவைக்கு அனுப்பி வைப்பு!
திருச்சி: திருச்சி பொன்மலை பணிமனையில், ரூ.9.30 கோடி மதிப்பில், 70 பேர் கொண்ட குழுவினரால், 7 மாதங்களில், புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ரயில் என்ஜின், ஊட்டி மலை ரயில் சேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த ஊட்டி மலை ரயிலில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் பயணம் செய்து, இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் உள்ள அழகிய காட்சிகளை கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயில், திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு, ஏற்கெனவே ஊட்டி மலையில் 4 என்ஜின்கள் இயங்கி வருகின்றன. அவை நிலக்கரியில் ஓடினாலும், அவற்றை ஆன் செய்யும்போது, ஏதாவது எண்ணெயில்தான் ஆன் செய்யவேண்டும். இதற்காக உலை ஆயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த என்ஜினை ஆன் செய்யும்போது, அதிக அளவில் புகை எழும்புவதால், உலை ஆயிலுக்குப் பதிலாக, அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் தற்போது ரயில் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் என்ஜினை, ரூ.9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினர், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, 7 மாதங்களில் வடிவமைத்துள்ளனர்.
இதில், என்ஜினை ஆன் செய்ய பயன்படுத்தப்படும் அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளளவு உள்ள டீசல் டேங்க் மற்றும் நிலக்கரி மூலம் நீராவி உருவாக்குவதற்கு, தண்ணீரை கொதிக்க வைக்க பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த புதிய ரயில் என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், என்ஜினின் உள்பகுதிளில் எல்இடி பல்புகளும் உள்ளன.
சிறப்பு ரயில் என்ஜின் வடிவமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், நேற்று லாரி மூலம் ஊட்டிக்கு மலை ரயில் சேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த என்ஜின் இயக்கத்துக்கு பின்னர், இதில் காணப்படும் நிறை மற்றும் குறைகளை கருத்தில் கொண்டு, அடுத்தடுத்த ரயில் என்ஜின்களையும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே பணிமனையில், புனரமைப்பு செய்யப்பட்ட ரயில் என்ஜின்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை கொண்டு ஊட்டி மலை ரயில் இயக்கப்படவுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications