திருச்சி - தஞ்சாவூர் வழியாக மெயின் லைனில் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கம்!
திருச்சி: திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக மெயின் லைனில் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயங்க தொடங்கின.
திருச்சியில் இருந்து விருத்தாசலம் வழியாக ஏற்கனவே மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெயின் லைனை பொறுத்தவரை திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டும் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்களை இயக்குவதற்கான வசதி உள்ளது. தஞ்சாவூரிலிருந்து சென்னை வரை உள்ள ரயில் பாதையை மின்மயம் ஆக்குவதற்காக ரூ.300 கோடியில் திட்டமிடப்பட்டது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக விழுப்புரம் ஜங்ஷன் வரையிலான இந்த திட்டத்தை இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவான ஆர்.வி.என்.எல். நிறுவனம் செய்து முடித்து உள்ளது.

இதன் கடைசி பகுதியான மயிலாடுதுறை முதல் தஞ்சாவூர் வரையிலான 68 கி.மீ.நீள ரயில் பாதையை மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 11-ந்தேதி தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபைகுமார் ராய் தலைமையிலான குழுவினர் பெங்களூருவில் இருந்து வந்து சிறப்பு ரெயிலில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது ஆர்.வி.என்.எல். அதிகாரிகள் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர். தண்டவாளத்தின் உறுதித் தன்மை மற்றும் வேகம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் மூலம் ரயில்களை இயக்கலாம் என சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்துதற்போதுதஞ்சாவூரிலிருந்து விழுப்புரம் வரை மின்சார ரயில் என்ஜின்கள் மூலம் பயணிகள் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களை இயக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
விழுப்புரத்திலிருந்து ஏற்கனவே சென்னை வரை மின்சார என்ஜின்கள் மூலமாகவே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே சென்னையிலிருந்து திருச்சி வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்குவதற்கான வழி பிறந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் திருச்சி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மைசூர்-மயிலாடுதுறை இடையே திருச்சி வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை கடந்த 14-ந் தேதியிலிருந்து மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
போடு தகிட தகிட.. அடுத்த ஆக்சனுக்கு தயாரான ICF! ரெடியாகுது வந்தே பாரத் சரக்கு ரயில்! எல்லாம் மாறுதே! -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
லால்குடி தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்.. கலைஞர் ஞாபகம் வந்துருச்சு சார்.. வியந்த திருச்சி -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications