திருச்சியில் பட்டாசு வெடித்தபடியே பைக்கில் வீலிங் செய்த இளைஞர்கள் 10 பேர் கைது.. எஸ்பி வருண்குமார்
திருச்சி: திருச்சியில் பட்டாசு வெடித்தபடியே வீலிங் செய்த இளைஞர்கள் 10 பேர் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் தெரிவித்தார்..
தீபாவளி பண்டிகை கடந்த 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு புத்தாடைகள், பட்டாசு, பலகாரங்கள் எல்லாம் விசேஷம். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு இளைஞர்கள் சிலர் புத்தாடை அணிந்துக் கொண்டு பட்டாசு வெடித்தபடியே தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

இந்த நிலையில் அந்த இளைஞர்கள் சிலர் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதாவது திருச்சி புறநகர் பகுதியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் வாண வேடிக்கை உள்ளிட்ட பட்டாசுகளை முன் பக்கம் வைத்து வெடித்தபடியே பயணித்தனர்.
இதை காண்போருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதிலும் ஒரு இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தின் முன்பு வெடியை கட்டிக் கொண்டு அதை கொளுத்தியவுடன் இரு சக்கர வாகனத்தில் வீலிங் எனும் சாகசத்தை செய்த காட்சிகள் வைரலாகின. இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட இளைஞர்களே வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர்.
அது போல் இரு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு சரவெடியை கொளுத்தி அதை சுழற்றியபடியே வெடிக்க செய்த காட்சிகளும் பதிவாகின. ஸ்டென்ட் ,சாகசம், வீலிங் செய்யக் கூடாது என போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இவர்களது வீடியோ திருச்சி எஸ்.பி வரை சென்றது. இதையடுத்து இந்த வீடியோவை பதிவிட்டது யார் என பார்த்த போது அஜய் என்ற 21 வயது இளைஞர் என தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி மாநகர போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் வீலிங் செய்ததாக லால்குடி, சமயபுரம், காணக்கிளியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீலிங்கில் ஈடுபட்ட மேலும் 4 பேர் உள்பட மொத்தம் 8 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து திருச்சி மாநகர போலீஸார் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. 10 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்தார். லால்குடி, சமயபுரம், காணக்கிளியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீலிங்கில் ஈடுபட்ட 4 பேர் உள்பட மொத்தம் 8 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனிடையே கைதான 10 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications