திருச்சியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா 352 பேர் பாதிப்பு - 8 பேர் மரணம்
திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 310 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை நடந்த பரிசோதனையில் 42 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக
திருச்சி: கொரோனா வைரஸ் தொற்று மாநிலம் முழுவதும் அதிகரித்து வருகிறது. திருச்சியில் மேலும் 42 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று செவ்வாய்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டது.கொரோனா தொற்றால் திருச்சியில் மேலும் இருவா் மரணமடைந்துள்ளனர் இதன் மூலம் கொரோனாவிற்கு திருச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை திருச்சி மாவட்டத்தில் 179 ஆக உயா்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 310 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை நடந்த பரிசோதனையில் 42 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 352 ஆக உயா்ந்துள்ளது.

மாநகர பகுதிகளில் 31 பேருக்கும், புறநகர் பகுதியில் 11 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மாநகரப் பகுதியான கே.கே. நகா் காவலா் குடியிருப்பில் 14 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடா்ந்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூா் மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் உள்பட 26 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை திருச்சி மாவட்டத்தில் 179 ஆக உயா்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் திருச்சி அரசு மருத்துவமனையில் மாநகரப் பகுதியைச் சோ்ந்தவா், திருவள்ளூரைச் சோ்ந்தவா், சமத்துவபுரம் விபத்தில் உயிரிழந்தவா், திண்டுக்கல்லிலிருந்து திருச்சி உறவினா் வீட்டுக்கு வந்தவா் என 4 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, திருவெறும்பூரில் 65 வயதுள்ள மளிகைக் கடைக்காரரும், அரசு தலைமை மருத்துவமனை செவிலியா் மூலம் ஏற்பட்ட தொற்றால் கண்டோன்மென்ட் பகுதியில் 74 வயது முதியவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
இதையடுத்து சுவாசக் கோளாறு, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறியுடன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா வார்டில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட திருச்சி திருவெறும்பூா் ஐஏஎஸ் நகரைச் சோ்ந்த 68 வயது முதியவருக்கு மற்றும் மருங்காபுரியைச் சோ்ந்த 70 வயது முதியவருக்கு கடந்த ஜூன் 19 ஆம் தேதி கரோனா உறுதியான நிலையில், தீவிர இருதய சுவாசத் தடை காரணமாக செவ்வாய்க்கிழமை இருவரும் உயிரிழந்தனா். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயா்ந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications