பயணிகள் வசதிக்காக சூப்பர் மாற்றம் .. வருகிற 27-ந்தேதி முதல் திருச்சி- பெங்களூரு விமான சேவையில்!
திருச்சி : திருச்சி- பெங்களூரு இடையே விமான சேவை வருகிற 27-ந்தேதி முதல் மாலை நேர சேவையாக மாற்றப்படுகிறது. இதேபோல் நவம்பர் 15 தேதி முதல் காலையிலும் விமான சேவை தொடர உள்ளது.
கொச்சியில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு காலை நேரத்தில் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமான சேவை தினமும் காலை 7.30 மணிக்கு கொச்சியில் இருந்து திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் நோக்கி செல்லும். பின்னர் அந்த விமானம் மீண்டும் காலை 10.30 மணிக்கு திருச்சி வந்து 11 மணி அளவில் திருச்சியில் இருந்து கொச்சிக்கு இயக்கப்பட்டு வந்தது.

இந்த சேவையானது தொழில்நுட்ப காரணங்களால் கொச்சியிலிருந்து இயக்கப்படாமல் திருச்சியில் இருந்து இயக்கப்படும் நிலை உருவாகி தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விமான சேவையானது வருகிற 27-ந்தேதி முதல் மாலை நேர சேவையாக மாற்றப்பட்டு பெங்களூருவிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு 6.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும்.
மீண்டும் திருச்சியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.50 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானமானது 74 பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளை கொண்ட நிலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சிக்கு காலை நேர சேவையாக இண்டிகோ விமானம் தனது சேவையை நவம்பர் 16-ந்தேதி முதல் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பெங்களூருவில் இருந்து காலை 6-50 மணிக்கு புறப்படும் இந்த விமானமானது காலை 8- 15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். மீண்டும் இந்த விமானம் காலை 9-15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 10-40 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் மீண்டும் மும்பை மற்றும் புதுடெல்லிக்கு விமானம் இயக்கப்படுவதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. தரையிறங்கும்போது வெடித்து சிதறிய டயர்! பயணிகள் அலறல் -
ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது.. திருச்சியில் திமுகவை அட்டாக் செய்த மோடி! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை!












Click it and Unblock the Notifications