அண்ணாமலை அரசியல்வாதியே கிடையாது.. பாஜக தலைவர் பதவியை ஆளுநருக்கு கொடுங்க.. காங்கிரஸ் எம்பி கிண்டல்
திருச்சி: ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றிவிட்டு அண்ணாமலை வகித்து வரும் பாஜக தலைவர் பதவியை அவருக்கு கொடுக்கலாம். அந்த பதவியில் ஆர்என் ரவி சிறப்பாக செயல்படுவார் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சனம் செய்தார்.
திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. இதற்கு அக்குழுவின் தலைவரும் திருச்சி எம்பியுமான காங்கிரஸை சேர்ந்த திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இதில் விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு பிறகு திருநாவுக்கரசர் எம்பி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி திருநாவுக்கரசரர் எம்பி கூறியதாவது:

அரசியல்வாதியாக செயல்படும் ஆளுநர்
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணிகள் ஜீன் மாதத்தில் நிறைவடையும். நேரு ஆட்சி காலத்திலிருந்து காங்கிரஸ் அரசு அமைந்த போதெல்லாம் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு தனியாருக்கு விற்கிறது. இது கண்டனத்துகுரியது. தமிழ்நாடு ஆளுநர் ரவி அரசியல்வாதியாக செயல்படுகிற எல்லா தகுதியும் இருக்கிறது. பாஜக தலைவர் அண்ணமலையை அந்த பொறுப்பிலிருந்து மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக ஆர்என் ரவியை தமிழ்நாடு பாஜக தலைவராக ஆக்கலாம். பாஜக தலைவர் பதவியில் அவர் சிறப்பாக செயல்படுவார்.

சீப்பான பப்ளிசிட்டி
இவரால் மாநில அரசுக்கும் கெடுதல் மத்திய அரசுக்கும் கெடுத்தல். ஆளுநர் பதவி என்பது நிலை இல்லாதது அவர் தமிழ்நாடு , தமிழகம் என்று பேசுவது அவசியம் இல்லாதது. இது போன்று தொடர்ந்து அவர் பேசுவது அவர் விளம்பரத்திற்காக தான். சீப்பான முறையில் பப்ளிசிட்டி தேடுகிறார்.

தனி ராஜ்ஜியம் நடத்த முயற்சி
பல்வேறு பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருக்கிறார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அவர் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் மகாராஜா போல தனி ராஜ்ஜியம் நடத்த முயற்சிப்பது தவறான முன்னுதாரணம். அவர் அவரை மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவரை மாற்ற வேண்டும். ஆளுநரின் போக்கு கண்டனத்திற்கு உரியது .

அண்ணாமலை அரசியல்வாதியே கிடையாது
அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை தவறாக பேசுவது வருந்தத்தக்கது அவரை பத்திரிக்கையாளர்கள் கண்டிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பது அவர்களது உரிமை அதற்கு அவர் பதில் கூறலாம் கூறாமலும் இருக்கலாம் ஆனால் பத்திரிக்கையாளர்களை திட்டுவதும் ஒருமையில் பேசுவதும் தவறு. அண்ணாமலை அரசியல்வாதி அல்ல. அவர் போலீசில் இருந்து வந்தவர். எனவே அரசியல்வாதியிடம் எதிர்பார்ப்பது போல் அவரிடம் எதிர்பார்ப்பது ஏமாற்றம் தான்'' என்றார்.












Click it and Unblock the Notifications